21 February 2016

கற்ப்பு என்பது இஸ்லாத்தில் இருபாலருக்கும் சமம்.

அவன் ஆம்பளே எப்படி வேண்டுமானலும் திரிவான் நீ பொம்பள நீதான் ஒழுக்கமாக இருக்கலாம் என ஒருதலைப் பட்சமாக இயங்குகிறது இன்றைய சமூகம்.
இன்னும் ஓர் கோண்ம்....
பெண் பிள்ளைகளை வளர்ப்பதை விட ஆண் பிள்ளைகளை வளர்ப்பது கஷ்டமாகி விட்ட காலகட்டம் இன்று
இஸ்லாம் இதனிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கற்பை பொதுவில் வைக்கிறது.
அல்குர்ஆன் ஆண்களே உங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுங்கள் கற்பை காத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
பார்க்க இறைவசனம்:
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (அல்குர் ஆன் 24:30.)
قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ
அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home