இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு வாழ்க்கை வரலாறு

ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 - மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார் இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
வாழ்க்கை வரலாறு
உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.
'காசுமீர பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். (காசுமீரக் கால்வாயை குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது).மோதிலால் நேரு பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார்.
கல்வி
ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமற்கிருதம் மற்றும் இந்தியக்கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவிலுள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை.
அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டில் இருந்து வெகுதொலைவு வந்ததை உணர்த்தியது, மற்றும் தாங்கமுடியாததாக இருந்ததாக உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
நேரு, அவருடைய "திரைபோசில்" இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்கு பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயில பதிவு செய்து கொண்டார்.. ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை; மாறாக தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
திருமணம்
கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாக செயல்பட்டார். ஆனால் 1936 இல் புற்றுநோயால் இறந்தார்.
அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான இலூயி மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுன்ட்பேட்டனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார்.
நன்றி
தகவல்:- wikipedia

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home