14 March 2013

குஜராத் அகதி முகாம்




-டாம் மோரேஸ், எழுத்தாளர், குஜராத் அகதி முகாம்களுக்கு நேரில் சென்று பார்த்து எழுதிய கட்டுரையிலிருந்து. தி இந்து, 24.3.2002

அந்தக் குழந்தை தலையைக் கவிழ்த்து நடுங்கியபடி உட்கார்ந்திருந்தது. திடீர் திடீரென விசும்பியது. அதற்கு 5 வயது இருக்கும். கிழிந்து போன மஞ்சள் சட்டையில் திட்டுத் திட்டாகக் கறை. சட்டையை விலக்கி அவளுடைய முதுகைக் காட்டினார் அவளுடைய தந்தை.

முதுகு முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். அவளைக் கொடூரமாக அடித்திருக்கிறார்கள். பாலியல் பலாத்தகாரமும் செய்யப்பட்டிருக்கிறாள் என்று தெளிவாகத் தெரிந்தது. தேவதையைப் போன்ற அந்தப் பிஞ்சு முகத்தில் பிரமை பிடித்திருந்தது. இவளைப் பேச வைக்க முடியவில்லையே. இனிமேல் பேசவே மாட்டாளோதந்தையின் குரல் உடைந்தது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீனா என்ற 30 வயதுப் பெண் என்னிடம் பேசத் தொடங்கினாள்:

நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளுக்கு 20 வயதில் ஒரு அழகான மகள். என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள். அந்தப் பெண்ணும் இப்படித்தான். பிரமை பிடித்துப் போய் பேசுவதே இல்லை. அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை.

-

அப்புறம் அவள் என்ன ஆனாளோ தெரியவில்லை

இந்தத் துயரம் தோய்ந்த சொற்கள் யாரோ ஒரு அப்பாவி முசுலீம் பெண்ணின் முடிவை மட்டும் சொல்லவில்லை. முசுலீம் மக்களுக்கெதிராக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்திய எல்லாக் கலவரங்களின் முடிவையும் தெரிவிக்கின்றன அந்த சொற்கள்.

அத்வானி நடத்திய ரத்த யாத்திரை, செங்கல் ஊர்வலம், பாபரி மசூதி இடிப்புஎன ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆர்.எஸ்.எஸ். காலிகளால் நர வேட்டையாடப்பட்ட முசுலீம் மக்களுக்கு அப்புறம் என்ன நடந்தது?

வீடிழந்தவர்கள், தொழிலிழந்தவர்கள், கை காலிழந்தவர்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள, கணவனை இழந்த பெண்கள், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு புத்தி பேதலித்த பெண்கள்அப்புறம் என்ன நடந்தது இவர்களுக்கெல்லாம்?

இந்தக் கொலை கொள்ளை கற்பழிப்புகளில், ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள், அவர்கள் மீது அரையும் குறையுமாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், விசாரணைக் கமிசன்களுக்கெல்லாம் அப்புறம் நடந்ததென்ன?

யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. பகல்பூர், லக்னெள, மீரட், கான்பூர், பிவாண்டி, சூரத், பம்பாய்ஒரு குற்றவாளி கூடத் தண்டிக்கப்படவில்லை. மாறாக, குற்றவாளிகள் அமைச்சர்களாகியிருக்கிறார்கள். அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home