14 March 2013

ஜின்களும் பேய்களும் ஒன்றா?


அஸ்ஸலாமு அலைக்கும்

பேய்களுக்கும் கெட்ட ஆவிகளுக்கும் ஜின்கள் என்று சொல்லப்படுவதாக சிலர் தவறான கருத்தை கூறி வருகிறார்கள். இக்கருத்து இஸ்லாத்திற்கு முற்றிலும் புறம்பானதாகும்.

ஆங்காங்கே சுற்றிக்கொண்டிருக்கும் இறந்து போனவர்களின் ஆவிகள் தான் பேய்கள் என்று பேய்நம்பிக்கை உள்ளவர்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை குர்ஆனும் ஹதீஸ்களும் பொய்யென நிராகரிக்கிறது.

இறந்தவர் நல்லவராக இருந்தாலும் தீயவராக இருந்தாலும் அவரின் உயிர் அல்லாஹ்வின் பிடியில் இருக்கிறது. அவனது கடுமையான பிடியிலிருந்து ஆவிகள் தப்பித்து வரவே முடியாது என்று திருக்குர்ஆன் கூறும் போது ஆவிகள் பூமியில் சுற்றித்திரிகிறது என நம்புவது குர்ஆனிற்கு எதிரானதும் மூடநம்பிக்கையுமாகும். எனவே பேய்கள் இருப்பதாக நம்பக்கூடாது.

உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும் அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான். சிந்திக்கிற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் (39 : 42)

பேய் நம்பிக்கை பொய்யானது என்பதை விரிவாக விளக்கும் வகையில் பேய் பிசாசு என்ற தலைப்பில் தனி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரம் அறிய அதை வாங்கி படித்துக்கொள்ளுங்கள்.
பேய்கள் என்று எதுவும் பூமியில் இல்லை. பேய் நம்பிக்கை என்பது இல்லாத ஒன்றை இருப்பதாக நம்புவதாகும். ஆனால் ஜின்களை நம்புவது பேய்களை நம்புவது போன்றதல்ல.

ஜின்கள் என்று ஒரு கூட்டம் தற்போதும் பூமியில் வாழ்ந்து வருவதாக குர்ஆனும் ஹதீஸ்களும் கூறுகிறது. ஜின்களை மறுத்தால் குர்ஆனையும் ஹதீஸ்களை மறுத்ததாகிவிடும். எனவே ஒவ்வொருவரும் ஜின்கள் இருப்பதாக அவசியம் நம்பியாக வேண்டும்.
பேய் நம்பிக்கைக்கும் ஜின் நம்பிக்கைக்கும் உள்ள இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொண்டால் இரண்டும் ஒன்று என்று சாதாரண அறிவு படைத்தவர் கூட கூறமாட்டார்.

ஜின்களின் வகைகள்

ஜின்களின் உடல் உறுப்புக்கள் மற்றும் தோற்றம் குறித்து விரிவான தகவல் ஹதீஸ்களில் கிடைக்கப்பெறவில்லை. காற்றில் பறந்து செல்பவர்கள் பூமியில் தங்கி வாழ்பவர்கள் நாய் மற்றும் பாம்பு வடிவில் திரிபவர்கள் இவ்வாறு மூன்று வகையினர் இருப்பதாக ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஜின்களில் மூன்று வகையினர் இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வகையினருக்கு இறக்கைகள் உண்டு. இவர்கள் காற்றில் பறந்து செல்வார்கள். நாய்களும் பாம்புகளும் இன்னொரு வகையினராகும். இன்னொரு வகையினர் (ஆங்காங்கே) தங்கிக்கொண்டும் (வேறு இடங்களுக்கு) பயனித்துக்கொண்டும் இருப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூ சஃலபா (ரலி)
நூல் : முஷ்கிலுல் ஆஸார் (2473)

பாம்வு வடிவிலும் நாய் வடிவிலும் சில ஜின்கள் இருக்கிறார்கள் என்று மேலுள்ள ஹதீஸ் கூறுகிறது. இன்றைக்கு உள்ள எல்லா நாய்களும் பாம்புகளும் ஜின்கள் தான் என்று புரிந்து விடக்கூடாது. இவ்வாறு புரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பாம்புகளிலும் நாய்களிலும் ஜின்களாக இருப்பவையும் உண்டு. ஜின்களாக இல்லாதவையும் உண்டு என்று கூறுவதே ஏற்புடையதாகும். பாம்புகளில் இவ்வாறு இரு வகை இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை பின்வரும் ஹதீஸிலிருந்து அறியலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home