7 April 2013

கேன்சரைத் தடுக்கும் 8 மூலிகைகள்

கேன்சரைத் தடுக்கும் 8 மூலிகைகள் - எங்கும் அலைய வேண்டாம் உங்கள் வீட்டு அடுப்பாங்கரையில் தான் இருக்கு...........!!



நம் நாட்டு சமையலின் பாரம்பரிய தாரக மந்திரமே, ‘உணவே மருந்து என்பது தான். அஞ்சரைப்பெட்டியில் உள்ள அனைத்தும் மூலிகைப்பொருட்கள் என்பது நம்மில் பலருக்கு மறந்தே போய் விட்டது.

சுவிஸ் நாட்டின் நோவர்ட்டிஸ் நிறுவனம் இந்தியாவில் கேன்சர் நோய் குணப்படுத்தும் மருந்துக்கு காப்புரிமை கேட்டு தொடரப்பட்ட அப்பீல் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ள நிலையில், கேன்சர் வராமல் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம். வருமுன் தற்பாதுக்காத்துக் கொள்வது தானே புத்திசாலித்தனம். 

காயங்களுக்கு மஞ்சளைக் கட்டும் நமது பாட்டிமார் வைத்தியத்தை விட்டு நாம் ரொம்பவே விலகி வந்து விட்டோம். மஞ்சளிலும், குக்குமப்பூவிலும் இல்லாத மருத்துவக்குணங்களா ?

1)
மஞ்சளின் மகிமை : 

கேன்சர் செல்களை அழிப்பதில் மசாலாக்களின் ராணி மஞ்சளின் மகிமை முதன்மையானது. இதில் உள்ள பாலிபீனால் குர்குமின் என்ற வேதிப்பொருள் கேன்சர் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது என ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2)
பெருஞ்சீரகம் : 

பெருஞ்சீரகத்தில் உள்ள அனீதோல் எனும் மூலப்பொருள் கேன்சர் செல்களின் புற்றுநோய் பிசின் மற்றும் ஊடுருவல் நடவடிக்கைகளை கட்டுக்குள் வைக்கிறது. வறுக்கப்பட்ட பெருஞ்சீரகத்தூள் சேர்க்கப்பட்ட தக்காளி சூப் கேன்சர் நோயாளிகளுக்கான விரிவான நிச்சயமாக உணவு ஆகும்.

3)
குங்குமப்பூ : 

இயற்கையான காரடெனாய்டு டை கார்போசிலிக் அமிலம் எனப்படும் குரோசிடின் குங்குமப்பூவில் அதிகமாக காணப்படுகிறது. கேன்சருக்கு குட்பை சொல்லும் சக்தி குங்குமப்பூவிற்கு உண்டாம்.

4)
சீரகம் : 

அடுத்ததா சீரகம். ஜீரண சக்திக்கு உதவுற சீரகம்ல, ‘ தைமோகுயினோன்' இருக்கற மூலப்பொருள் கேன்சருக்கு மருந்தா மாறுதாம்.

5)
இலவங்கப்பட்டை : 

தினமும் அரைகரண்டி லவங்கத்தூளை எடுத்துக்கொண்டால், கேன்சர் அபாயங்கலில் இருந்து நம்மை நிச்சயம் தற்காத்துக் கொள்ளலாமாம். இயர்கையாகவே உணவை கெட்டுப் போகவிடாமல் காக்கும் இதில் கூடுதலாக அயர்ன்னும், கால்சியமும் உள்ளது.

6)
மிளகாய் விதைகள் : 

இரண்டு கப் திராட்சைகளை சாப்பிடுவதற்கான பலனை, ஒரு ஸ்பூன் மிளகாய் விதைகல் தந்து விடுகின்றனவாம். இதில் உள்ள குவார்சிடின் எனும் மூலப்பொருள், புற்றுப்பண்பு உயிரணுக்களை அழிப்பதற்கான, மருத்துவப் பொருளாக பயன் படுகிறது.

7)
மிளகு : 

லுகீமியாவின் செல்களை அழிப்பதிலும், குறைப்பதிலும் மிளகின் பங்கு இன்றியமையாதது. நோய்க்கிருமிகளுக்கு மிளகைப் பார்த்தால் கொஞ்சம் பயம் தான். எதிரி வீட்டுக்கு போனாலும் 3 மிளகை சாப்பிட்டால், விஷம் கூட முறிந்து விடும்னு சும்மாவா சொல்றாங்க.

8)
இஞ்சி : 

கொழுப்பை குறைப்பதிலும், உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் அளிப்பதிலும், கேன்சர் கிருமிகளை அழிப்பதிலும் வல்லவன் இஞ்சி.

அஷ்ரஃப்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home