6 April 2013

யார் இந்த நேதாஜி

யார் இந்த நேதாஜி



அவசரக்காரர்-ஆத்திரக்காரர் என்று கூறினார் மகாத்மா காந்தி
படபடப்பானவர்-பண்படாதவர் என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்

ஆனால் வரலாறு ஏற்றுக்கொண்டது அவன் ஒரு

விடுதலை வீரன்

கொள்கை வீரன் என்று.

தாய் நாட்டின் விடுதலைக்காக தனது 24 வயதில் I.C.S என்ற உத்தியோகத்தை துாக்கி எறி்தார்.

35
வயதில் தனக்கு சொந்தமாக இருந்த கட்டாக் நகரில் தான் பிறந்த மாளிகையை தேசத்திற்காக அர்பணித்தார்.

42
வயதில் தான் தலைமை தாங்கியிருந்த அகில இந்திய காங்கிரஸ் பதவியை துாக்கி எறிந்தார்.

44
வயதில் தன் தேச விடுதலைக்காக தாய் நாட்டை விட்டு பிரிந்து அயல்தேசம் சென்றார்.

இப்படியாக தனது தேசத்தின் விடுதலைக்காக முழுமையாக அர்பணிப்புடன் போராடிய ஒரு விடுதலை வீரன் இவன்.

தேசத்தை விட்டு வெளியேறி இருப்பினும் கொண்ட கொள்கையில் ஒரு உறுதியுடன் அன்றைய உலக ஒழுங்கை நன்கு விளங்கிக் கொண்டு அதனை தனது தேசத்தின் விடுதலைக்காக மாற்றியமைத்த ஒரு அரசியல் தலைவனும் கூட இவன்.

தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் கூட இந்த சுபாஷ் சந்திரபோஸ் அவர்களே.!

ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்றிய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன. அன்றைய கால கட்டம் 2ம் உலகப்போர் இடம்பெற்ற காலமாதலால் அங்கு காணப்பட்ட அரசியல் சாதக தன்மையை தனது தேசத்தின் விடுதலைக்கான இலகுவழியாக மாற்றும் எண்ணத்துடன் அவர் செயற்பட்டார்.இதை அன்று மகாத்மா காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்தும் இருந்தார்.இருந்தும் இவர் தனது பாதையை மாற்றியதாக இல்லை.

1943
ஒக்டோபர் மாதம் 21ம் திகதியன்று காலையில் சிங்கப்பூர் தைதோவா கெகிஜோவில் நடைபெற்ற மகாநாட்டில் தற்காலிக சுதந்திர இந்திய அரசை பிரகடனப்படுத்திய நேதாஜி

நமக்கென்று ஓர் இராணுவமும் அமைக்கப்பட்டு விட்டதனால், நமக்கென்று ஒரு சுதந்திர அரசை அமைப்பது சாத்தியமும், அவசியமும் ஆயிற்று. இந்தியாவின் முழு விடுதலைக்கான இறுதிப்போரை நடாத்துவதற்காகவே இந்தத் தற்காலிக அரசு பிறந்திருக்கின்றது”-

என்று முழங்கினார்.

இதனை தொடர்ந்து ஒக்டோபர் 23ம் திகதியில் இருந்து நவம்பர் 18ம் திகதிக்குள்

ஜப்பான, பர்மா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி குரொஷியா, சீனா, மஞ்சுகோ, இத்தாலி, தாய்லாந்து

போன்ற அரசுகள் தற்காலிக சுதந்திர இந்திய அரசை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்தன.அதற்கு அத்திவாரமாக ஏற்கனவே

இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்திருந்தார்.பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார்.

நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்னிரண்டு வயதிற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்.

அத்துடன் தனது படைகளை கட்டுக்கோப்பாகவும் ஒழுக்கமுள்ள சிறந்த வீரர்களாகவும் அவர் உறுவாக்கியிருந்தார்.இதனை அவதானித்த

ஜப்பான் அரசு தான் 2ம் உலகபோரில் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை நேதாஜியிடமே கையளித்தது.

1943
ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார்.

1944
மார்ச் 18 இந்திய மண்ணில் நேதாஜியின் படைகள் கால் பதித்தது.தொடர்ந்து நிலங்களை கைப்பற்றியபடி முன்நேறிய இவரது படைகள் அமெரிக்க அரசிடம் அடிபணிந்த ஜப்பானால் ஆட்டம் காணத்தொடங்கியது.படைகள் மீண்டும் பர்மாவிற்கு பின்வாங்கின,இருந்தும் அந்த தோல்வியை அவர்

இது நாம் ஆடிய முதல் ஆட்டம் இதில் நாம் தோற்றாலும் அடுத்துவரும் வெற்றிகளுக்கு இது படிக்கல்லாக அமையும் என்றார்.

1945
ஆகஸ்ட் மாதம் 18 ம் திகதி ஜப்பானுக்கு போகும் இவர் பயணம் செய்த விமானம் வழியில் தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதால் இவர் மரணமடைந்ததாக இன்று வரை நம்பப்படுகிறது.

குறிப்பு: தமிழீழ தேசிய தலைவர் அவர்கள் இவரை பற்றி குறிப்பிடும் போது

சிறுவயது முதல் இந்திய விடுதலைப்போராட்ட வரலாறுதான் என்னைக் கவர்ந்திருந்தது. இநதப் போராட்டத்தில் நேதாஜி அவர்கள் கொண்டிருந்த பங்கு என்னை ஆழமாகத் தொட்டது.

சுபாஸ் சந்திரபோஸின் வாழ்க்கை என்னைக் கவர்ந்தது. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் நூல் வடிவில் வந்தன. அவற்றை படித்தேன். அவை அப்படியே என் நெஞ்சில் படிந்தன. கடைசித்துளி இரத்தம் இருக்கும்வரை என் மண்ணுக்காக நான் போராடுவேன். என்ற நேதாஜியின் வீரஉரையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். நினைவிற்கு வரும்போதெல்லாம் இந்தச் சொற்கள் என் நெஞ்சை சிலிர்க்க வைத்தன.என்றார்.

இப்படியான ஒரு வீரனை ஈன்றெடுத்த அந்த வீரத்தாயின் பெயர் தான்
பார்வதி.

இங்கு ஒரு விடையம் மிக தெளிவானது.அதாவது இயற்கை மட்டும் அன்றி வரலாறுகள் கூட ஒரு வட்டப்பாதையில் திரும்ப திரும்ப நிகழ்பவையே.




அஷ்ரஃப்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home