6 April 2013

உலகில் நிறைய புரட்ச்சிகள் தோல்வியில் தான் தொடங்கியது !!!

உலகில் நிறைய புரட்ச்சிகள் தோல்வியில் தான் தொடங்கியது !!! 





ஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றுப் போனால் தீவிரவாதி. இதுதான் உலகம் முழுவதும் புரட்சியாளர்களுக்கு இருக்கும் பெயர். புரட்சிகள் பெரும்பாலும் தோல்வியில் தொடங்குகின்றன அல்லது தோல்வியில் முடிகின்றன. மாவோ, பிடல் காஸ்ட்ரோ, யாசர்அரபாத் ,பகத் சிங்க், அச்வகுள்ளகான சந்திரசேகர ஆசாத் , வாஞ்சிநாதன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இன்னும் பலரின் புரட்சிகள் தோல்வியில் தான் தொடங்கின. நாம் அனைவரும் ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் தீவிரவாதி தான் ஒருவர் தன்னுடைய காதலியே தீவிரமாக காதலிப்பார் .அவர் காதிலில் தீவிரவாதி .ஒருவர் தன்னுடைய தொழில் தீவிரமாக இருப்பார் ,சிலர் படிப்பில் தீவிரமாக இருப்பார் சிலர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு குரல் கொடுப்பதில் தீவிரமாக இருப்பார் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் .

சிறுவயதில் கூட அம்மா அப்பா படிப்பில் தீவிரமாக படிக்க வேண்டும் என்று தான் பிள்ளைகளை வளர்ப்பார்கள் .நியாயத்திற்கு அநியாயத்திற்கு குரல் கொடுப்பவன் பெரும்பாலும் தீவிரவாதி பட்டம் வாங்கியவர்கள் தான் எடுத்து காட்டாக ஈழத்திற்கு போராடி உயிர் இழந்த அப்பாவி மக்கள் கூட தீவிரவாதியாகத்தான் இந்த உலக ஊடகம் சித்தரித்தது 

ஈழத்திற்காக முதலில் அஹிம்சை வழியில் போராடிய ஈழ தந்தை செல்வா அவர்களையும் தீவிரவாதியாக சித்தரித்துத் தான் கொன்றார்கள் .ஈழ மக்கள் தங்களுடைய உறவுகளான கணவன் மனைவி குழந்தைகள் என்று ஒட்டுமொத்தமாக இழந்து போராடினாலும் அவர்களும் இந்த குருட்டு ஊடகங்களுக்கு தீவிரவாதிகளாகத்தான் தெரிந்தார்கள் .புத்தத்தை போதிக்கும் புத்த பிட்சுகள் எந்த அளவுக்கு ஈழ மக்களை கொல்வதில் முன்னணியில் நின்றார்கள் அவர்களை தீவிரவாதிகளாக இந்த உலக ஊடகங்களுக்கு தெரியவில்லையா ?

இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன் நடந்த சிப்பாய்கலகம், கதர் போராட்டம், கிலாபத் கிளர்ச்சி என்று பல புரட்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. ஆனால், மாணவர்கள் புரட்சியை கையில் எடுத்தால் எப்போதும்மே தோற்றதில்லை. உலகின் மிக அதிக புரட்சிகளை வெற்றி பெற வைத்ததும் அவர்கள் தான். இதனால் மாணவர்கள் களம் இறங்கினால் எந்த புரட்சியும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை 1989 வரை உலகம் முழுவதும் இருந்தது. 

இந்த நம்பிக்கையை பீரங்கி ஏற்றி நசுக்கியது சீனா. 1989ல் சீன பொதுவுடைமை கட்சியின் அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளை எதிர்த்து சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள தியாமென் சதுக்கத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் குதித்தனர். மாணவர்களை மிரட்ட பீரங்கிகளை களம் இறக்கியது, சீன அரசு. நிராயுதபாணியாக நின்ற மாணவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். தியாமென் சதுக்கம் ரத்தகளறி ஆனது. இறந்தது வெறும் 200 பேர்தான் என்று பச்சைப்பொய்யை சொன்னது சீனா. உலகம் முழுவதும் பல நாடுகளும் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்தன. இதுவரை நடந்த புரட்சிகளில் உலகம் முழுவதும் பெரிதும் கவனிக்கப்பட்டு தோல்வியில் முடிந்த புரட்சி இதுதான்.

புரட்சியாளர்களும் தியாகமும் பிரிக்க முடியாதவை. ஆனால், வாழும் காலத்தில் அவர்கள் பல அவமானங்களை சந்திக்கின்றனர். புரட்சியாளர்களின் ஒருவரான லெனின், ஒருமுறை நொந்துபோன நிலையில் கூறிய வார்த்தைகள் இவை... புரட்சியாளன் வாழும் காலத்தில் அவனை மனிதனாக கூட ஏற்காதவர்கள், மறைந்தபின் மகானாக மாற்றி விடுகிறார்கள்'...

இந்த வார்த்தைகள் இன்றைக்கும் பொருந்தக்கூடியதாகவே உள்ளது.

அஷ்ரஃப்




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home