ஏராளமான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி
ஏராளமான சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி
முள்ளங்கி என்பது ஒரு நீர்க்காயாகும். இது
ஆண்டு முழுவதும் எந்த தங்கு தடையும் இன்றி கிடைக்கும். மேலும், குளிர் காலத்தில்
அதிகமாக விளையும் காய்கறி வகையாகும். முள்ளங்கி காய் மட்டுமல்லாமல், அதன் கீரையும்
சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
அதிக சத்துக்கள்
நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
சத்து
மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள்
நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.
17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
இதில், காய்கறிளிலேயே விட்டமின் சி அதிகளவில் இருப்பது
முள்ளங்கியில்தான். அதேப்போல, கால்சியமும், பாஸ்பரசும் முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது அதன் சிறப்பாகும்.
முள்ளங்கியை விட
அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.100 கிராம் கீரையில்...
41கே கலோரியும், 3.8 கிராம் புரதமும், 1 கிராம் நார்ச்சத்தும், 81 மில்லி கிராம் விட்டமின் சி ((ஒரு
மனிதனுக்குத் தேவைப்படும் அடிப்படையான விட்டமின் சி இதில் இரண்டு மடங்கு உள்ளது), 5295 மைக்கோ கிராம் பீடா கரோடின் (இதுவும் இரு
மடங்கு உள்ளது), 400 மில்லி கிராம் கால்சியம் (ஒரு மனிதனுக்கு 100 கிராம் தேவை), 59 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை
நிறைந்துள்ளன.
ஒரு மனிதனுக்கு
நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில்
அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும்
முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.
அஷ்ரஃப்
அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் முள்ளங்கி மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.
சத்து மாத்திரைகளுக்கும், டானிக்குகளுக்கும் செலவிடுவதை விட்டுவிட்டு இதுபோன்ற சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை அதிகளவில் வாங்கி உண்டு வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.
100 கிராம் முள்ளங்கியில் உள்ள சத்துக்களைப் பார்ப்போம்.
17 கலோரி, 2 கிராம் நார்ச்சத்து, 15 மில்லி கிராம் விட்டமின் சி, 35 மில்லி கிராம் கால்சியம், 22 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. இதில், காய்கறிளிலேயே விட்டமின் சி அதிகளவில் இருப்பது முள்ளங்கியில்தான். அதேப்போல, கால்சியமும், பாஸ்பரசும் முள்ளங்கியில் அதிகளவில் இருப்பது அதன் சிறப்பாகும்.
முள்ளங்கியை விட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.100 கிராம் கீரையில்...
41கே கலோரியும், 3.8 கிராம் புரதமும், 1 கிராம் நார்ச்சத்தும், 81 மில்லி கிராம் விட்டமின் சி ((ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் அடிப்படையான விட்டமின் சி இதில் இரண்டு மடங்கு உள்ளது), 5295 மைக்கோ கிராம் பீடா கரோடின் (இதுவும் இரு மடங்கு உள்ளது), 400 மில்லி கிராம் கால்சியம் (ஒரு மனிதனுக்கு 100 கிராம் தேவை), 59 மில்லி கிராம் பாஸ்பரஸ் ஆகியவை நிறைந்துள்ளன.
ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச சத்துக்கள் பெருமளவு இந்த முள்ளங்கியில் அதிகமாகவே நிறைந்துள்ளது. எனவே, வெறும் நீர்க்காய் என்றோ, சளிப்பிடிக்கும் என்றோ, சுவையற்றது என்று கூறியோ முள்ளங்கியையோ, அதன் கீரையையோ வெறுக்காமல், அவ்வப்போது உணவில் முள்ளங்கி மற்றும் முள்ளங்கிக் கீரையை சேர்த்துக் கொண்டால் மருத்துவரிடம் செல்வதைத் தடுக்கலாம்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home