21 April 2013

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்!!



நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்!!

இச்சை மேலாங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவதே சுயஇன்பம் எனப்படுகிறது.

வழிகெட்ட சலபிக் கூட்டத்தை தவிர மற்ற அனைவரிடமும் 
சுயஇன்பம் கொள்வது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட பாவமான செயலாகும்.

நோன்பு என்பது சுப்ஹ் முதல் மக்ரிப்வரை உண்ணாமல் பருகாமல் இருப்பதோடு இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வதுமாகும். இதைப் பின்வரும் நபிமொழியிலிருந்து அறியலாம்.

அல்லாஹ்வின்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். எனவே,
நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபடவேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இரு முறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்தஇறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும்வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்!
(
மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்றுஅல்லாஹ்கூறுகிறான்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல் : புகாரி1894

இந்த அடிப்படையில்தான் நோன்புகாலகட்டத்தில் பகல் நேரங்களில் மனைவியுடன் உறவு கொள்வதும் தடுக்கப்படுகிறது.

நோன்பு என்பது இச்சையைக் கட்டுப்படுத்திக் கொள்வதுதான் எனும் போது சுயஇன்பம் கொண்டு இச்சையைத் தீா்த்துக் கொள்வது எப்படி நோன்பாகும்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!

அறிவிப்பவா்அபூஹுரைரா(ரலி) நூல் : புகாரி1903

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home