வெப்பச்சூட்டினால் (வெயிலினால்) மயக்கம் அடைந்தவருக்கான முதலுதவி:-
வெப்பச்சூட்டினால் (வெயிலினால்) மயக்கம்
அடைந்தவருக்கான முதலுதவி:-
வெப்பச்சூட்டினால் (வெயிலினால்) மயக்கம்
அடைந்தவருக்கான முதலுதவி:-
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இப்போதே வெயில் மண்டையைப்
பிளக்கிறது. ஏசி அறையிலேயே பணியாற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு பெரிதாக ஒரு
பாதிப்பும் இல்லை. ஆனால், வெளியில் அலைந்து திரிந்து வேலை செய்யும்
தொழிலாளர்களின் நிலை பரிதாபம்.
பொதுவாக அதிக
வெப்பத்தினால் நமது உடல் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால், நமது உடலே ஒரு தன்னிச்சையான
குளிர்விப்பானை வைத்துள்ளது. அதுதான் வியர்வை. அதிகமான வெப்பத்தின் போது நமது தோல்
வியர்வையை சுரப்பதால் நமது தோல் குளிர்ச்சியை அடைகிறது. இதனால் வெப்பத்தில்
இருந்து காப்பாற்றப்படுகிறது. இந்த வியர்வை இல்லையென்றால், தோல் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுவிடும்
என்பதை மறுக்க முடியாது.
சில வேலைகளில் அதிக
வெப்பச் சூட்டினால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழும் நபர்களை பார்க்க நேரிடும்.
அதுபோன்ற சமயங்களில் ஓடிச் சென்று அவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டியது நமது
கடமையாகும்.
ஒருவர் அதிக
வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தால், உடனடியாக அவரது உடலை தண்ணீர் ஊற்றி
குளிர்விக்கலாம்.
நீரிலேயே அமர வைக்க
வழி இருந்தால் அதனைச் செய்யலாம் அல்லது ஈரத்தில் நனைக்கப்பட்ட துணியைக் கொண்டு
போர்த்தி விடலாம்.
அவரது உடல் சீரான
நிலைக்கு வரும் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.
குடிக்க நீர்
கொடுக்கலாம்.
அவர்
அணிந்திருக்கும் ஆடைகள் மிகவும் தடிமனாகவோ, காற்றுப்புகாததாகவோ இருப்பின் அவற்றை
சற்று தளர்த்தியாக இருக்கச் செய்யலாம்.
காற்று அவர் மீது
படும்படி அவரை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மயக்கமடைந்து வெகு
நேரம் கண்விழிக்காமல் இருந்தால் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பலாம்.
இதுபோன்ற
முதலுதவிகள் செய்து அவரை சரியான நிலைக்குக் கொண்டு வந்த பிறகு தேவைப்படின் மருத்துவரிடம்
அழைத்துச் செல்வது நல்லது
அஷ்ரஃப்
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இப்போதே வெயில் மண்டையைப் பிளக்கிறது. ஏசி அறையிலேயே பணியாற்றும் நம்மைப் போன்றவர்களுக்கு பெரிதாக ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால், வெளியில் அலைந்து திரிந்து வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலை பரிதாபம்.
பொதுவாக அதிக வெப்பத்தினால் நமது உடல் பாதிக்கப்படக் கூடாது என்ற காரணத்தினால், நமது உடலே ஒரு தன்னிச்சையான குளிர்விப்பானை வைத்துள்ளது. அதுதான் வியர்வை. அதிகமான வெப்பத்தின் போது நமது தோல் வியர்வையை சுரப்பதால் நமது தோல் குளிர்ச்சியை அடைகிறது. இதனால் வெப்பத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறது. இந்த வியர்வை இல்லையென்றால், தோல் வெப்பத்தினால் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை மறுக்க முடியாது.
சில வேலைகளில் அதிக வெப்பச் சூட்டினால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்து விழும் நபர்களை பார்க்க நேரிடும். அதுபோன்ற சமயங்களில் ஓடிச் சென்று அவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டியது நமது கடமையாகும்.
ஒருவர் அதிக வெப்பத்தினால் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தால், உடனடியாக அவரது உடலை தண்ணீர் ஊற்றி குளிர்விக்கலாம்.
நீரிலேயே அமர வைக்க வழி இருந்தால் அதனைச் செய்யலாம் அல்லது ஈரத்தில் நனைக்கப்பட்ட துணியைக் கொண்டு போர்த்தி விடலாம்.
அவரது உடல் சீரான நிலைக்கு வரும் வரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.
குடிக்க நீர் கொடுக்கலாம்.
அவர் அணிந்திருக்கும் ஆடைகள் மிகவும் தடிமனாகவோ, காற்றுப்புகாததாகவோ இருப்பின் அவற்றை சற்று தளர்த்தியாக இருக்கச் செய்யலாம்.
காற்று அவர் மீது படும்படி அவரை வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மயக்கமடைந்து வெகு நேரம் கண்விழிக்காமல் இருந்தால் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பலாம்.
இதுபோன்ற முதலுதவிகள் செய்து அவரை சரியான நிலைக்குக் கொண்டு வந்த பிறகு தேவைப்படின் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home