21 April 2013

அறிவாளிகள் அல்லாஹ்வின் சட்டத்தை மதிப்பார்கள்..



அறிவாளிகள் அல்லாஹ்வின் சட்டத்தை மதிப்பார்கள்..

சகோதரர்களே.....தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை ஒரு சிலர் தங்களின் சுய நலத்தால் மனோ இச்சையை மார்க்கமாக்கி மக்களை வழிகெடுத்து வருவதை அறிவோம்....

மக்கள் இம்மை மறுமை இரண்டிலும் வெற்றி பெற மக்களை நேர் வழியின் பாலும்.....ஒழுக்க ரீதியாக செம்மையாக வாழ அதிலும் குறிப்பாக விபச்சாரத்தை இஸ்லாம் முற்றிலும் தடை செய்கிறது...

ஒருவன் விபச்சாரத்தின் பக்கம் நெருங்கினால் அவனுக்கு கடுமையான தண்டணை வழங்கச்சொல்கிறது...விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும். [அல்குர்-ஆன் 24 : 2]

திருமணம் முடித்த ஒரு நபர் விபச்சாரம் செய்ததற்காக அவருக்கு மரண தண்டணை வழங்கச் சொல்லி நபிகளார் உத்தரவிட்டார்கள் (புகாரி : 6828 ஹதீஸின் கருத்து)

இவ்வாறு கடுமையான தண்டணை தரச்சொல்லும் இஸ்லாம் விபச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க ஆசைப்படுகிறது..அதற்கான வழி முறைகளையும் அழகாக சொல்லித்தருகிறது...

விபச்சாரத்தை ஒழிக்க இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்:

ஆண்களும் பெண்களும் தங்களது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்

பெண்கள் ஆண்களுடன் குழைந்து பேசக்கூடாது

அந்நிய ஆண்களுடன் பெண்கள் தனித்திருக்கக் கூடாது

பெண்கள் தங்களுக்கு மணம் முடிக்கத்தடை செய்யப்பட்ட ஆண்களைத்தவிர மற்றவர்கள் முன்னிலையில் தங்களது உடல் அழகை வெளிக்காட்டக்கூடாது. பர்தாவைப் பேண வேண்டும்.
இதையும் மீறி யாரேனும் விபச்சாரம் செய்து பிடிபட்டு, அது தகுந்த 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டால் அவர் திருமணம் முடிக்காதவராக இருந்தால் அவரை நூறு கசையடி அடிக்க வேண்டும்.

திருமணம் முடித்தவராக இருந்தால் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். அதை ஒருசாரார் பார்க்க வேண்டும்.

அது மட்டுமல்ல விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்கிறது...

"
விப‌ச்சார‌த்திற்க்கு நெருங்காதீர்! அது வெட்க‌ கேடான‌தாக‌வும் தீய‌
வ‌ழியாக‌வும் இருக்கிற‌து" (அல் குர்ஆன் 17:32)

இந்த அழகான இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் மத்ஹப் என்ற பெயரில் ஒரு சில மறை கழன்றவர்கள் மார்க்கம் என்ற பெயரில் இதற்கு மாற்ற மாக சட்டம்(?) எழுதி வைத்திருப்பதை பாருங்கள்..

விபச்சாரத்தை அனுமதிக்கும் மத்ஹபு
விபச்சாரம் செய்வதற்காக ஒரு பெண்ணை வாடகைக்குப் பேசி அவளுடன் விபச்சாரம் செய்தால் அபூஹனீபாவின் கருத்துப்படி அவனுக்குத் தண்டனை இல்லை. கன்ஸுத்தகாயிக், பாகம் 1, பக்.184

விபச்சாரத்தில்தப்பிக்க..
தன்னுடன் (விபச்சாரத்தினால் பிடிபட்ட) அந்த பெண் அடுத்தவரின் மனைவியாக இருந்தாலும் சரி, அவளை தான் மனைவி என்று வாதிட்டால் தண்டனை கிடையாது! 
(
ஷாஹியா இப்னு ஆபிதீன் பக்கம் 29 )

இது மட்டுமல்ல இன்னும் ஏராளமாக இது போன்ற வழிகெட்டவர்களால் இயற்றப்பட்ட சட்டத்தை மார்க்கம் என்ற பெயரில் படித்துக்கொடுத்துக்கொண்டும் அதை கற்றவர்கள் மார்க்க அறிஞர்களாகவும் போற்றப்படுவதையும் பார்க்கிறோம்...

இந்த மத்ஹபு சட்டங்களையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக இன்றைக்கு நம் நாட்டு நீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருப்பதை பாருங்கள்... திருமணத்துக்கு முன் பெண்ணின் விருப்பத்தோடு உறவில் ஈடுபடுவது பாலியல் பலாத்காரம் ஆகாது என்று டெல்லி கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ரகு மற்றும் உஷா, கடந்த 2006ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். அப்போது உஷாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய ரகு பலமுறை உறவில் ஈடுபட்டார். ஆனால் இதுவரை உஷாவை, ரகு திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து போலீசில் உஷா புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், கடந்த 3ம் தேதி ரகுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நேற்று முன்தினம் கூடுதல் செசன்ஸ் நீதிபதி வினய்குமார் கன்னா முன் வந்தது. அப்போது ரகு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் பாலக் முகமது மியோ கூறியதாவது: ரகுவும், உஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். டிரைவர் வேலை செய்து வரும் ரகு, உஷாவின் விருப்பத்தினாலேயே உடலுறவு கொண்டுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள காலதாமதம் செய்ததால், உஷா சந்தேகமடைந்து ரகு மீது போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் போலீசார்தான் ரகு மீது பலாத்கார வழக்கு போட்டுள்ளனர். எனவே ரகுவுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று கேட்டார். இதையடுத்து நீதிபதி, ‘உஷாவை பலாத்காரம் செய்ததாக ரகு மீது சுமத்தப்பட்ட குற்றத்தில், உஷாவின் விருப்பமின்றி அவர் உறவில் ஈடுபட்டதாக தெரியவில்லை. எனவே அதனை பலாத்கார வழக்காக கருத முடியாது. எனவே ரூ.25,000 பிணைத்தொகை செலுத்திய பின் ரகுவை ஜாமீனில் விட அனுமதிக்கிறேன்என்றார். இதையடுத்து கைது செய்யப்பட்ட ரகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

எப்படி இருக்கிறது பாருங்கள் தீர்ப்பு ..? நன்றாக தெரிகிறது இருவரும் திருமணத்திற்கு முண்பே உடலுறவில் ஈடுபட்டது...இவர்களை கடுமையாக தண்டிக்க வக்கில்லாமல் அந்த பெண்ணின் சம்மதத்துடன் இந்த உடலுறவு நடை பெற்றிருப்பதால் இது தவறல்ல என்ற வாதம் சரியா...?

அல்லாஹ் வின் சட்டம்தான் சரியானது என நிரூபிக்கும் வண்ணம் வந்த தீர்ப்பு இது...அறிவாளிகள் அல்லாஹ்வின் சட்டத்தை மதிப்பார்கள்..


அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home