21 April 2013

உலகின் வெளிநாட்டில் வேலைசெய்யும் தொழிலாளர்களால் அதிக வருமானம்பெறும் நாடுகளில் இந்தியா முதலாம் இடத்தையும் சீனா இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.

ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும்
நிலவட்டுமாக...

சமீபகாலமாக முகநூலில் போலி ஐடியில் வந்து சில கிணற்றுத்தவளைகள் இஸ்லாமியர்களை அரேபிய அடிமைகள் என்று வக்கிரமாக கிண்டலடித்து வருகின்றன.இந்திய பொருளாதார முன்னேற்றத்தில் இஸ்லாமியர்களின் பங்கு பற்றியும் இஸ்லாமிய நாடுகளின் பங்குபற்றியும் இதுபோன்ற வெத்துவேட்டுகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.இதோ சில புள்ளிவிவரங்கள்....

உலகின் வெளிநாட்டில் வேலைசெய்யும் தொழிலாளர்களால் அதிக வருமானம்பெறும் நாடுகளில் இந்தியா முதலாம் இடத்தையும் சீனா இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.

அரபுநாடுகளில் சுமார் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்துவருகிரார்கள்.அதில் 50% மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள்.கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும் உலகத்தின் பல்வேறுநாடுகளில் பணிபுரியும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பிவைத்த தொகை சுமார் மூன்று லட்சத்தி இருபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய்.அதில் 45% வருமானமும் வளைகுடா நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது.

இவ்வாறு கிடைக்கும் வருமானம்தான் இந்தியா பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று உலகவங்கி தெரிவித்துள்ளது.அரபுநாடுகளை நம்பிவாழ்வது இஸ்லாமியர்கள் மட்டுமல்ல.லட்சகணக்கான பல்வேறு மதத்தவர்களும் தான்.அப்படியிருக்க இஸ்லாமியர்களை அரேபிய அடிமைகள் என்றுசொல்லும் அறிவீனர்கள் நம்நாட்டிற்கு அரேபியாவில் இருந்து வரும் வருமானத்தை வேண்டாம் என்று சொல்வார்களா?

இங்குவாழும் லட்சகணக்கான இந்தியர்களான நாங்கள் ஜாதிமதவித்தியாசம் இல்லாமல் அண்ணன்தம்பியாகத்தான் பழகிவருகிறோம்.முகநூலில் வரும் முகவரியில்லாத பேர்வழிகள் தயவுசெய்து எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Indian-job-seekers-in-Gulf-feel-the-pinch/Article1-1037624.aspx

 இங்குவாழும் லட்சகணக்கான இந்தியர்களான நாங்கள் ஜாதிமதவித்தியாசம் இல்லாமல் அண்ணன்தம்பியாகத்தான் பழகிவருகிறோம்.முகநூலில் வரும் முகவரியில்லாத பேர்வழிகள் தயவுசெய்து எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home