10 April 2013

”கடிகாரம்”


# படித்ததில் பிடித்தது #

கடிகாரம்

ஒரு மனிதன் இறந்து நேராக சொர்கத்துக்கு போனான்.அங்கு ஒரு பெரிய சுவற்றில் நிறைய கடிகாரங்கள் மாட்டி இருப்பதை பார்த்தான்.அங்கு இருந்த ஏஞ்சலிடம் கேட்டான்,ஏன் இங்கு இவ்வளவு கடிகாரங்கள் மாட்டி இருக்கிறது என்று.

ஏஞ்சல் சொன்னால் இது பொய்யை கண்டுபிடிக்கும் கடிகாரம்.ஒவ்வொருவருக்கும் ஒரு கடிகாரம் இருக்கிறது.நீங்கள் பூமியில் ஒவ்வொரு பொய் சொல்லும்போதும் இந்த கடிகாரத்தில் உள்ள முள் நகர ஆரம்பிக்கும்.

அதோ இருக்கிறதே அது அன்னை தெரசாவின் கடிகாரம்.அவர்கள் இதுவரை ஒரு பொய் கூட சொன்னதில்லை அதனால் அந்த கடிகாரத்தில் உள்ள முள் இதுவரை நகர்ந்தது இல்லை என்று ஏஞ்சல் சொன்னாள்.

அந்த மனிதன் கேட்டான் எங்க ஊரு அரசியல்வாதிங்க கடிகாரம் எங்கே இருக்கிறது என்று.

ஏஞ்சல் சொன்னாள் அது எல்லாம் எங்க ஆபிஸ் ரூமில் இருக்கிறது,அந்த கடிகாரங்களை தான் நாங்கள் ஃபேன் ஆக பயன்படுத்துகிறோம் என்று. 


அஷ்ரஃப்




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home