6 April 2013

உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானம்

உலகத்தின் முதன் முதல் சோலார் சக்தியால் மட்டுமே இயங்கும் விமானம்




சோலாரின் உபயோகத்தை கொஞ்சம் கொஞ்சமாய் நாம் உணர்ந்து வரும் வேளையில் பலர் அந்த டெக்னாலஜியை நம்புவதில்லை. அதெல்லாம் சரிவராது பா, அதுக்கு நல்ல வெயில் வேணும், சூரியன் நேராக அடிக்கணும், ரொம்ப காஸ்ட்லி அப்படி இப்படின்னு சில கன்சர்வேட்டீஸ் இருக்கும் போது ஒரு முழு சோலார் விமானத்தை வடிவமைத்து அதை டெஸ்ட் பிளைட்டை ஓட்டி சாதனை படைத்துள்ளனர். இந்த டெஸ்ட் பிளைட் ஏற்கனவே ஸ்பெயினில் இருந்து மொராக்கா நாடு வரை சோதனை செய்யபட்டு அடுத்து இப்போது அமெரிக்காவின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலை(Coast to Coast) வரை பறக்க விடுகிறார்கள். மே 1ஆம் தேதி முதல் கலிஃஃபோர்னியா நகரத்தில் தொடங்கி ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 விமான தளத்தில் இறக்கி ஒவ்வொரு சிட்டிக்கும் விசிட் அடிக்க போகிறது. இது கடைசியா நியூயார்க் ஜூலை மாதம் வந்து சேரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
இந்த விமானம் ஒரு துளி பெட்ரோல் கூட இல்லாமல் பகல் மற்றும் இரவும் பறக்கும் திறன் படைத்தது. இதில் ஆட்டோ பைலட் என்று அத்தனை கமர்ஷியல் விமானத்துக்குன்டான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்கிறது. அது போக இதில் இப்போது பைலட்டை தவிர வேறு எந்த ஒரு ஆளையும் கூட பறக்க அனுமதிக்கவில்லை. மணிக்கு 80 கிலோமீட்டர் வேகம் தான் என்றபோதிலும் இதன் வேகத்தை அதிகரிக்க முடியும் என இதனை வடிவமைத்த விஞ்சானிகள் கூறுகின்றனர்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home