7 April 2013

சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு

..சம்பவம் ஒன்று.. விளைவுகள் இரண்டு
___________________________________________________________________ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம்.
உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா.."தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்.."____________________________________________________________________ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா...சோம்பேறி.
அவராலே செய்யமுடியலேன்னா....." நேரம் இல்லே.."____________________________________________________________________எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா..." முட்டாள்தனம்"
அவர் பண்ணினா.." அவரும் மனுஷந்தானே..கடவுளா..?"___________________________________________________________________நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்"
அவர் செஞ்சா.." முன்னுதாரணம்"___________________________________________________________________நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா.."பிடிவாதம்"
அவர் அப்படி நெனைச்சா..." கொள்கையில் உறுதி.."___________________________________________________________________நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா.." காக்கா பிடிக்கறீங்க."
அவர் முதலாளிக்கிட்ட அப்படி நடந்துக்கிட்டா.." ஒத்துழைப்பு..பணிவு"___________________________________________________________________நீங்க அலுவலக நேரத்திலே வெளியே இருந்தா.." ஊர் சுத்தறீங்க"
அவர் இருந்தா.. " பாவம்.. நாயா அலையறார்.. மாடா உழைக்கறார்.."___________________________________________________________________நீங்க உடம்புக்கு முடியலேன்னு ஒருநாள் லீவு போட்டா.. வேறே கம்பெனிக்கு முயற்சி பண்றீங்க"
அவர் லீவு போட்டா..ஓவரா உழைச்சு உடம்ப கெடுத்துக்கிட்டார்.."___________________________________________________________________
என்ன உலகமடா இது..????

அஷ்ரஃப்


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home