7 April 2013

"மேதைகளின் நகைச்சுவை"


"மேதைகளின் நகைச்சுவை"
உபயோகம்:
1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு.
அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான்.ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள். அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார்.
உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார்.பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை.அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''
நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள். 



அஷ்ரஃப்



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home