இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் ......
கொஞ்ச நாளைக்கு முன்பு எனது அலுவலகத்திற்கு
டிசைன் செய்ய இருவர் வந்தார்கள். போட்டோவை எல்லாம் கொடுத்தார்கள். நான் அதை ஆல்டர்
பண்ணிக்கிட்டு இருந்தேன்.
அதில் ஒரு போட்டோல இருந்தவர் மட்டும் பார்ப்பதற்கு இசுலாமியர் போல் இருந்தார். ஆனால் அவரும் இந்து தான்.
அதைப் பார்த்த ஒருவர், "என்னடா... முஸ்லிம் மாதிரி... தீவிரவாதி மாதிரி இருக்கான்!"- என்றார்.
அவரிடம் நான் விவாதித்து இருப்பேன். என்னோடு வேலை பார்க்கும் என் இசுலாமியர் நண்பரின் முகத்தை பார்த்தேன். எந்த சலனமும் இன்றி வேலை செய்து கொண்டு இருந்தார்.
என் நண்பரை சங்கடப்படுத்த விரும்பாமல் நானும் அமைதியாகி விட்டேன். அந்த சம்பவம் இன்றுவரை என் நெஞ்சை அறுத்துக் கொண்டே இருக்கிறது...
அப்போது என் மனதிற்குள் தோன்றியது " இவர் தீவிரவாதிகளை நேரில் பார்த்திருக்க மாட்டார், அவர்களோடு பேசியிருக்க மாட்டார், அவர்களின் குணாதிசயம் என்ன என்பதும் இவருக்கு தெரியாது. அதுபோலவே முஸ்லிம்களோடும் பழகி இருக்கமாட்டார், முஸ்லிம்களின் எண்ணம், சிந்தனை, நேயம் இவை எதுவும் இவருக்கு தெரியாது. ஆனால் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்ற நம்பிக்கை அதாவது பொதுப்புத்தி மட்டும் அசைக்க முடியாமல் இருக்கிறது!"
அவரது எண்ணத்திற்கு அடிப்படை காரணம்,
* எல்லோரும் சொல்கிறார்கள்,
* எல்லோரும் நம்புகிறார்கள்
* நாமும் சொல்வோம்,

* நாமும் நம்புவோம்
- என்ற பொதுப்புத்தி தானே...?
இந்த பொதுப்புத்தியை மாற்ற என் சகோதரர்களாகிய இசுலாமியர்களிடம் என்ன திட்டம் இருக்கிறது?
இந்த பொதுப்புத்தி உங்களை வாழவிடாமல் சீரழிக்கிறது என்பதை உணருகிறீர்களா?
உணர்ந்து கொண்டால் மட்டும் போதுமா??
என்ன செய்யப் போகிறீர்கள்???
மாற்று சிந்தனையை உருவாக்குங்கள்; உங்களோடு பயணிக்க எம் போன்றவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு....!
- அங்கனூர் தமிழன் வேலு
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home