11 June 2013

அரைகுறை ஆடைகளுடன் பேஸ்புக்கில் ஆபாச போஸ்: இஸ்ரேல் பெண் ராணுவ வீராங்கனைகளுக்கு தண்டனை

ஜெருசலேம்: அரை குறை ஆடைகள் அணிந்து, ஆபாசமாக எடுக்கப்பட்ட தங்களது போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்ட இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெண் ராணுவ வீராங்கனைகள் தண்டனைக்கு உள்ளாயினர். இஸ்ரேல் நாட்டில், 18 வயது பூர்த்தியடைந்த இருபாலருமே கட்டாயமாக ராணுவத்தில் அடிப்படை பயிற்சி பெற வேண்டும் என்னும் சட்டம் அமுலில் உள்ளது. israeli military women post more photos இந்நிலையில், சமீபத்தில் இராணுவத்தில் புதிதாக சேர்ந்த நான்கு இளம் பெண்கள் குறும்பாக தங்களது அரை நிர்வாண போட்டோக்களை பேஸ்புக்கில் வெளியிட்டனர். அதில் அவர்கள் மேலாடை அணியாமல் தலைக் கவசம் மட்டும் அணிந்தபடியும், இடுப்புக்கு கீழே உள்ளாடை மட்டும் அணிந்தபடிம், கையில் துப்பாக்கியுடனும் போஸ் கொடுத்துள்ளனர். இணையதளங்களில் உலா வந்த இப்புகைபடங்களால், இஸ்ரேல் ராணுவத்தின் ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு குறித்து சர்வதேச ஊடகங்கள் விமர்சிக்கத் தொடங்கின. இதனையடுத்து, ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அந்த நான்கு பெண்களும் துறை ரீதியாக விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் முடிவில் அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டதாக தெரிவித்த ராணுவ உயரதிகாரிகள், தண்டனை குறித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டனர்.



அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home