கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி:
கொழுப்பை குறைக்கும் செம்பருத்தி:
மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின்
நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும்
அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன.
கண்ணை கவரும் இதன்
சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக
தோற்றமளிக்கும்.
வீட்டில் அழகுக்காக
வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.
செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட
பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
தேங்காய் எண்ணையில்
இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின்
கருமை நிறம் பாதுகாக்கப்படும்.
இங்கிலாந்தை
சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த
தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும்
பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.
அதன் விபரம்:
உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை
சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர்
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தொடர்ந்து இதை
பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு
சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.
சருமத்தை
பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து
பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.
இயற்கையின் கொடை
என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து
ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றி:
வணக்கம்மலேசியா தளம்
அஷ்ரஃப்
கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும்.
வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை. செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும்.
தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும்.
இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.
அதன் விபரம்: உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது.
சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது.
இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றி: வணக்கம்மலேசியா தளம்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home