"முஸ்லிம்களை கருவறுக்கும் இந்திய அரசியல் சாசன சட்டம்!
இந்திய அரசியல் சாசனத்தின் 341வது சட்டப்பிரிவின் காரணமாகவே கடந்த 63 ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் "இட ஒதுக்கீடு" மறுக்கப்பட்டு பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர்.
சர்ச்சார் கமிட்டி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து பின்னடைவுகளுக்கும் மூல காரணமே, இந்த 341 வது சட்டப்பிரிவு தான்.
மதத்தின் பெயரால் இட ஒதுக்கீடு கூடாது, என்ற இந்த விதி 1950ம் ஆண்டு சேர்த்து, இன்றளவிலும் முஸ்லிம்களுக்கு மட்டும் இட ஒதுக்கீடு என்பதை எட்டாக்கனியாக்கி வைத்துள்ளனர்.
1936ம் ஆண்டில் அம்பேத்கார் உருவாக்கிய வரைவு அரசியல் சாசன சட்டத்தில் "Depressed Class" என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்தி முஸ்லிம்களுக்கென்று தனியாக "இட ஒதுக்கீடு"க்கு வழி வகை செய்யப்பட்டிருந்தது.
ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1950ல் மாற்றியமைக்கைப்பட்ட அரசியல் சாசன சட்டத்தில் முஸ்லிம்களை கருவறுக்கும் ஒரே நோக்கத்துடன்
மதத்தின் பெயரால் "இட ஒதுக்கீடு" கூடாது என்ற பிரிவுகளை புகுத்தியுள்ளனர்.
எனவே தான், எத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் இட ஒதுக்கீட்டை பெற முடியாத சூழலில் முஸ்லிம் சமுதாயம் மூர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது.
முஸ்லிம் இட ஒதுக்கீடு தொடர்பாக, நீதிமன்றங்கள் அரசிடம் கேட்கும் கேள்விகளுக்கு வருடக்கணக்கில் மத்திய மாநில அரசுகள் விளக்கமளிக்காமல், காலம் தாழ்த்தி முஸ்லிம்களுக்கு மேலும் துரோகமிழைத்து வருகின்றன.
2012 துவக்கத்தில் 4.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட வழக்கில், 21/01/2012ல் மத்திய அரசிடம் நீதிமன்றம் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அரசு இன்று வரை நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது.... இதுவே ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பாகும்.
4,5% இட ஒதுக்கீடு கூட முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்கப்பட்டதல்ல, முஸ்லிம்கள், கிருத்துவர்கள் பார்சிகள் என பல சிறுபான்மை சமுதாய மக்களுக்கும் சேர்த்து வழங்கப்பட்டது தான் அந்த இட ஒதுக்கீடு.
கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு இந்த 4.5% அற்ப ஒதுக்கீடு, "யானைப் பசிக்கு சோளப்பொறி" யை போன்றது தான், என்றாலும் அதை கொடுப்பதிலும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் மத்திய அரசு முஸ்லிம்களை வஞ்சித்து வருகிறது.
ஒரு நாட்டு "அரசியல் சாசன சட்டப் பிரிவின் பெயரால்" அந்நாட்டு மக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது, இந்தியாவில் மட்டும் தானிருக்க முடியும்.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home