15 June 2013

தைராய்டு புற்றுநோயின் 6 அறிகுறிகள் விழிப்புணர்வு தகவல் !!


அமெரிக்க புற்றுநோய் அமைப்பு ஒன்றின் சார்பில் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட சர்வேயில் புற்றுநோய் தைராய்டுகளினால் 6000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.. மேலும் இந்நோயில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள்தான் என்று அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். தைராய்டு புற்றுநோயை 90 சதவீதம் குணப்படுத்த முடியும் என்றாலும் அதில் நீங்கள் அலட்சியம் காட்டக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகளை பார்க்கலாம்.


கழுத்து பகுதியில் கட்டி

குரல் வளையின் மேற்பகுதியில் ஒரு சிறிய அளவு வீக்கம் அல்லது ஏதேனும் கட்டி போன்ற மாறுதல்கள் ஏற்பட்டிருப்பின் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் தைராய்டு மெதுவாக அல்லது விரைவாக வளரும் புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறியாகும். 

பேசுவதில் கடினம்

இந்த நோய் சுற்றியுள்ள திசுக்களை நோக்கி வளர்கிறது என்றால் இந்த நேரத்தில் குரல்வளையில் வலி ஏற்படும் வழக்கமாக பேசுவதைக்காட்டிலும் அதிக சிரமத்துடன் குரல் கரகரப்பாக தொண்டைகட்டியது போல பேச நேரிடும்.

நிணநீர் கணுக்கள்

தைராய்டு புற்றுநோயாளிகளுக்கு கழுத்தில் நிணநீர் கணுக்கள் விரிவாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொண்டையில் ஏற்படும் மென்மையான விரிவாக்கத்தை தைராய்டு புற்றுநோயாளிகளால் உணரமுடியும். 

விழுங்குவதில் சிரமம்

பேசுவதில் சிரமத்தை ஏற்படுத்துவதை விட அதிகமாக விழுங்குவதில் சிரமம் ஏற்படும். உணவு, பழங்கள் என எது சாப்பிட்டாலும் அதிக சிரமத்துடன் தான் விழுங்க நேரிடும். ஏனெனில் தைராய்டு புற்றுநோய் உணவுகுழாயை ஒடுக்ககிறது.

சுவாசித்தலில் சிரமம்

வழக்கமான நாட்களில் சுவாசிப்பதை போல தைராய்டு புற்றுநோயாளிகளால் சுவாசிக்க முடியாது. தைராய்டு புற்றுநோயாளிகள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். தொண்டைகள் சுறுங்கி கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது..

கழுத்து வலி

கழுத்து பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கழுத்து வலி ஏற்படும். மேலும் கழுத்து பகுதியில் உள்ள நரம்புகளின் மீது ஏற்படும் அழுத்தம் காரணமாக காதுகள் வரை பரவி காதுகளில் வலி ஏற்படக்கூடும்.

தைராய்டு புற்றுநோயின் அறிகுறிகள் ஏற்படின் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.

தகவலுக்கு நன்றி 
நண்பனின் நண்பன்



அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home