6 June 2013

கொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது?


கருவுற்ற பெண் அல்லது பெண் விலங்கின் கருப்பையினுள் நச்சுக்கொடி (Placenta) ஒன்று உருவாகி குழந்தை பிறக்கும்வரை அதன் வழியாகக் குழந்தைக்கு ஊட்டச்சத்து தரப்படுகிறது. கருவிலுள்ள குழந்தையின் கொப்பூழுடன் நச்சுக்கொடி (placenta) கொப்பூழ்க் கொடியால் (umbilical cord) இணைக்கப்பட்டுள்ளது. இந்த நச்சுக்கொடி, தாய்-சேய் இணைப்பி எனவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உயிர்ப்பாதை (Life line) உயிர்வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு பொருளும் காற்று, குருதி ஊட்டச்சத்து கொப்பூழ்க் கொடி வழியாகவே குழந்தைக்குச் சென்றாக வேண்டும். அது ஓர் அங்குலம் (inch) அகலத்திற்கு மேற்படாத அகலமும் ஓர் அடி நீளமும் ஒரு வேளை கொண்டிருக்கலாம்.

குழந்தை பிறந்த பின் அந்தத் தாய்-சேய் இணைப்பி (placenta) கருவுற்றிருந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட பணிக்காக இருந்த இக்கொடி விலக்கீடு செய்யப்படும்.

பிறந்த குழந்தையின் வயிற்றிலிருந்து ஒரு சில அங்குலங்கள் (inches) தள்ளி கத்திரியால் கொப்பூழ்க் கொடி வெட்டப்படும் இது. இந்த வெட்டுதல்-வலியேதும் ஏற்படுத்தாது. ஏனெனில் கொப்பூழ்க் கொடியில் நரம்புகள் ஏதும் இல்லை. குழந்தை இப்போது தானாகவே மூச்சை இயக்கிக் கொள்ளும்.


via
பெண்கள் Women.

அஷ்ரஃப் 



0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home