காது... கவனம்!!!
தற்போது பலருக்கும் உள்ள சந்தேகம், செல்போன் பேசுவதால்
செவித்திறன் பாதிக்கப்படுமா? என்பது. 'செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்
என்று
அறுதியிட்டுக் கூற முடியாது. காரணம் அதுகுறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமை அடையவில்லை.
ஆனால் செல்போனில் அளவோடு பேசுவதே நல்லது' என்கிறார்கள் நிபுணர்கள். மணிக்கணக்கில் செல்போனில் பேசும், பாடல் கேட்கும் வழக்கம் உள்ள நாம் இதைக் கவனத்தில்கொள்வது நல்லது. காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரை உள்ள சத்தங்களைத்தான் நம் காது கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களைக் கேட்கலாம்.
ஒருநாளைக்கு அதிகபட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் சீரான இடைவெளி விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாகக் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதால், காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத்தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக்கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம்.
அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் பேசினால் அவ்வளவாகப் பாதிப்பு இருக்காது. ஆனால் தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும்.
தவிர, செல்போனில் இருந்து வெப்பமும், வெப்பக் கதிர் வீச்சும் வெளிப்படுகின்றன. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால் இந்த வெப்பமும், கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே உள்ள மிக நுண்ணிய நரம்புகளைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
அதேபோல செல்போனில் விட்டுவிட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாள டைவில், தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கேட்க முடியாமல் போகலாம்.
செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் 'ஹேண்ட்ஸ் பிரீ' உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு குறைக்கலாம் என்பது வல்லுநர்கள் கருத்து.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home