10 August 2013

மட்டன் பிரியாணி! ! ! !


நம் வீட்டில் எப்போது பிரியாணி செய்தாலும் நமது இஸ்லாமிய நண்பர்கள் வீட்டில் செய்வது போல் இருப்பது இல்லை என்ற குறை இருந்து வந்தது, அதனால் என் இஸ்லாமிய தோழியிடம் அவர்களின் பிரியாணி செய்முறையை கேட்டு செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது. அந்த பிரியாணிசெய்முறை உங்களுக்காகவும்
தேவையான பொருட்கள்;-

அரிசி - 1 கிலோ
மட்டன் - 1 கிலோ
இஞ்சி - 100 கிராம்
பூண்டு - 100 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
வொங்காயம் - 1/4 கிலோ
பச்சைமிளகாய் - 10
பட்டை - 10
லவங்கம் - 10
ஏலக்காய் - 10
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 250 கிராம்
எலும்மிச்சை – 1
புதினா - 1/2 கட்டு
கொத்தமல்லி - 1/2 கட்டு
எண்ணெய் - 50 கிராம் (தேவைக்கு)
நெய் - 50 கிராம் (தேவைக்கு)
உப்பு - தேவைக்கு

கேசரிப்பவுடர் - தேவைக்கு
அரைக்க வேண்டியவை;-
இஞ்சி, பூண்டு இரண்டையும் நன்கு அரைக்கவும்.
பட்டை- 5, லவங்கம்- 5, ஏலக்காய்- 5,மிளகாய்த்தூள், மல்லித்தூள் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவ ும்

செய்முறை;-

ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய்இரண்டையும் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை-5, லவங்கம்-5, ஏலக்காய்-5 போட்டு அத்துடன் இஞ்சி,பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைநன்கு வதக்கவும்.
அதனுடன் கறி சேர்த்து நன்கு கிளறி அத்துடன் கறிக்கு தேவையான உப்பையும் போட்டு கிளறவும். 5 நிமிடம் கழித்து அரைத்து வைத்த மசாலாப்பவுடரையு ம் சேர்த்து கிளறி, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

அத்துடன் தக்காளி, புதினா, கொத்தமல்லி, சேர்த்து கிளறி. பிறகு தயிரையும் சேர்த்து நன்கு கிளறி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
முக்கால் பாகம் வெந்ததும் சாதத்திற்கு தேவையான தண்ணீர் ஊற்றி அத்துடன் உப்பு, கேசரி பவுடர், எலுமிச்சை சாறு சேர்த்துநன்கு கிளறி விட்டு ஒரு கொதி வந்ததும் அரிசியை போட்டு கிளறி விடவும்.

5
நிமிடம் கழித்து நன்கு கிளறி அரை வேக்காடு வெந்து தண்ணிர் வற்றியதும் ஒரு மூடி போட்டு அதன்மேல் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். (தம் விடவும்) இப்படி செய்யும் போது அடுப்பை குறைத்து வைக்க வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து எடுத்தால் சுவையான மட்டன் பிரியாணி தயார் .

நன்றி-கதம்பம்
..

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home