31 August 2013

பழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல் பற்றிய தகவல் !



பழைய கணினியை பயனுள்ளதாக மாற்றுதல் பற்றிய தகவல் !
நாளுக்கு நாள் புதுப்புது வடிவுகளில், திறன்களில், புத்தம்புதிய தொழில் நுட்பத்தில் கணினி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வெளிவந்த வண்ணம் உள்ளன,நாமும் சளைக்காமல் வாங்கிக் குவித்து கொண்டே….யிருக்கின்டே இருக்கின்றோம்,இதனால் நம்முடைய வீடும் அலுவலகமும் கணினிகளின் குவியலாக மாறிவருகின்றன,அதனால் கைவசம் உள்ள பழைய கணினிகளை கயலான் கடைகளில் கொடுத்தால் காசுபணம் கிடைக்குமா அல்லது குப்பையில் போடலாமா என யோசித்து கொண்டிருக்கும்போது அடடா புதியதாக 32 பிட் செயலியின் வேகத் திறனில் இந்த கணினி வந்தபோது எவ்வளவு அரும்பாடு பட்டு அதிக பணச்செலவில் வாங்கியதை இப்படி வீணாக்குவதா என்ற ஒரு எண்ணம் வந்தது. சரி என்னதான் செய்வது என்று யோசித்து பார்த்ததில் கீழ்காணும் பயனுள்ள ஒருசில வழிகளில் இந்த பழைய தனியாள் கணினிகளை உபயோகித்து கொள்ளலாமே என தெரிய வந்தது.
1. இசை/ஒளிப்பட இயக்கியாக : பழைய தனியாள் கணினியை மிகச்சிறந்த ஒளி ஒலி இயக்கியாக பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்காக ஒலி அட்டை (Sound card ) விண்டோ 98, winamp அல்லது அதற்கு இணையான ஒத்தியங்கும் (compatible)மென்பொருள் (இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன) ஒலி பெருக்கி (speaker), MP3 அல்லது video கோப்புகள் ஆகியவை மட்டுமே தேவையாகும், winamp அல்லது VLC இயக்கியின் தற்போதைய பதிப்பை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவி கொள்க. பின்னர் MP3 அல்லது video ஆகிய வற்றின் கோப்புகளை பழைய கணினியில் நகலெடுத்து கொண்டு இயக்கி மிக அற்புதமான ஒளி ஒலிகளை கணினியில் பார்த்து, கேட்டு மகிழ்வதற்காக பயன்படுத்தி கொள்க.
2. தொலைக்காட்சியாக : சிறந்த ஒளி ஒலிகளை பார்த்து கேட்டு மகிழலாம் என்றவுடன் உங்களுக்கு தொலைகாட்சி பெட்டிதான் என்று கண்டிப்பாக ஞாபகம் வரும் ,அதனால் தொலைகாட்சி பெட்டியை வாங்குவதற்கு பதிலாக பழைய தனியாள் கணினியை தொலைக்காட்சி பெட்டியாக பயன்படுத்தி கொள்ள முடியும்என்ற செய்தியை நினைவில் வைத்து கொள்க . இதற்காக கணினியில் கூடுதலான ஒரு TV tuner card ஒன்றை மட்டும் வாங்கி பொருத்தி கொண்டால் போதும் (இதனுடைய புதிய அட்டைகள் ரூ.1300 விலையிலும், ஒருமுறை பயன்படுத்தியது எனில் ரூ.500 விலையிலும் கிடைக்கின்றன) இதன்மூலம் விருப்பமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து மகிழலாம்,அல்லது நிகழ்ச்சிகளை கோப்பாக பதிவுசெய்து பின்னர் தேவையானபோது பார்த்து மகிழலாம். இந்த நிகழ்ச்சிகளை DVD, VCD, VCR ஆகியவைகளில் பதிவு செய்து பின்னர் வேறு இடங்களுக்கு எடுத்து சென்றும் பயன்படுத்தலாம்.
3. பல் ஊடக பணியகம் : பிணையத்திற்கான அட்டையை (network card) கணினியில் பொருத்தி அமைத்திடுக. பின்னர் அருகிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் இருக்கும் கணினிகளை வளாகப்பிணையம் (LAN) அடிப்படையில் இணைத்து இணைய இணைப்பில் உங்கள் கணினியை இணைத்து mp3, video போன்றவை களின் கோப்புகளை இணையத்தில்இருந்து பதிவிறக்கம்செய்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்க. ஒளி, ஒலி நாடாக்களிருந்து படங்கள், இசைகளை music match juke என்ற மென்பொருள் மூலம் உருமாற்றம் செய்து கணினியை மத்திய பணியகம் போன்று பயன்படுத்துக.
4. இணையத்தின் வழி செலுத்தியாக (internet router) பயன்படுத்திட : அகல்கற்றை இணைய இணைப்பு (broad band internet ) அல்லது கம்பி வழி இணைய இணைப்பு பெற்றிருந்தால் கணினியை வழிச்செலுத்தி router அல்லது பதிலி(proxy )யாக மாற்றி பயன்படுத்த முடியும். இணையத்தில் உலாவுதல்(web surfing) பதிவிறக்கம் செய்தல் (downloading) , மின்னஞ்சலை கையாளுதல் (e-mail handling) , உரையாடுதல் (chatting) போன்ற பல இணைய வழி பணிகளின் மத்திய நுழைவு வாயிலாக இந்த பழைய தனியாள் கணினியை மற்றவர்களின் கணினிகளுக்காக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் இணைய பணியகமாகவும் இதனை பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறான இணைய பணியகத்திற்காக (Server) புதியதாக கணினி எதையும் வாங்காமல் கையில் இருக்கும் பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும். இதற்காக கூடுதல் வாளாக பிணைய அட்டை(LAN card)யும் அதற்கான மென்பொருட்களுமான wingate, win proxy, analog proxy போன்றவைகள் மட்டுமே தேவையாகும், இவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது லினக்ஸ் பகிர்ந்தளிப்பானும் அடிப்படை IP வழிச் செலுத்தியும் ஆகியவற்றிற்கான இலவசமென்பொருளை நிறுவி இணையத்தின் வழிசெலுத்தி router அல்லது பதிலிproxy யாகபயன்படுத்தி கொள்ளமுடியும்.
5. தகவல் பணியகமாக (data server) : பிணைய வழியில் அனைத்து கணினிகளையும் பழைய கணினியுடன் இணைத்து, தேவையான அனைத்து தரவுகளையும் சேகரித்து வைத்து கொண்டு தேவைப்படும் போது எடுத்து பயன்படுத்தி கொள்ளும் பணியகமாக மாற்றி கொள்ள முடியும். இந்த வகையில் சிறிய நிறுவனங்களின் கணக்கு பதிவியில் மென்பொருட்களான TallyERP, Ex போன்றவைகளின் மத்திய தரவு பணியகம் போன்று பராமரித்து மற்ற கணினிகளின் மூலம் அணுகி தேவையான தரவுகளை கையாளுமாறு பயன்படுத்தி கொள்ள முடியும். அன்றாடம் பணிபுரியும்போது உருவாகும் கோப்புகளை அவ்வப்போது காப்பு நகலகமாக (backup) பாதுகாத்து கொள்ளலாம். இதற்காக backup) மென்பொருளை நிறுவி கொண்டு தானாகவே குறிப்பிட்ட நேர இடைவெளியில் காப்பு நகல் செய்து கொள்ளும்படி அமைத்திட முடியும்.
6. சொற்செயலி(Word Processor ) : புதிய கணினியில் பயனுள்ள வேறு ஏதேனும் பணிகளை செய்து வரும்நேரத்தில் மிக நீண்ட கடிதம் அல்லது கட்டுரை போன்றவைகளை அன்றாடம் தயார் செய்யும் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வழக்குறைஞர்கள் போன்றவர்கள் இவைகளை உள்ளீடு செய்வதற்கு பழைய கணினியை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக ஓப்பன் ஆஃபிஸ் போன்ற இலவச மென் பொருளை பயன்படுத்தி கொள்ளலாம்.
7. இணைய உலாவியாக பயன்படுத்துதல்(web browser) : ஓப்ரா அல்லதுஃபயர் ஃபாக்ஸ் போன்ற மென் பொருட்களை பதிவிறக்கம் செய்து பழைய தனியாள் கணினியில் நிறுவிக்கொண்டு இணையத்தில் உலாவுதல்(browsing) , உரையாடுதல் (chatting) போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இலவச பதிவிறக்க மேலாளரை (free download manager) பயன்படுத்தி இசைகள், மென்பொருட்கள்ஆகியவைகளை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். Antivirus தடுப்பானை பயன்படுத்தி இவ்வாறு பதிவிறக்கம் செய்யும் கோப்புகளை வடிகட்டி கொள்ளலாம். நேரடி வங்கி பணிகள் (online banking) நேரடி பொருள் கொள்முதல் (online shopping) போன்ற செயல்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு பழைய தனியாள் கணினியை இணைய இணைப்பிற்கு பயன்படுத்தும்போது நம்முடைய தனிப்பட்ட அல்லது நிறுவனத்தின் முக்கிய தகவல்களை நமக்கு தெரியாமல் திருடி செல்ல முடியாது என்பதை கவணத்தில் கொள்க.
8. கணக்கு பதவியில் மேலாளராக (Accounts manager ): பெரும்பாலான அலுவலகங்களில் பயன்படுத்தும் கணக்கு பதிவிய லுக்கான மென்பொருட்கள் புதியதாக வரும் இயக்க முறைமை யுடன் (operating system) ஒத்தியங்க மறுத்துவிடுகிறது. இதனை தவிர்ப்பதற்காக கணக்கு பதிவியலுக்கான மென்பொருளை மேம்படுத்த வேண்டுமெனில் செலவு மிக்கதும் அதிக நேரத்தை எடுத்து கொள்ளும் செயலாக ஆகின்றது. DOS, ஆரம்பநிலை விண்டோபதிப்பு ஆகியவற்றில் இயங்கிய கணக்கு பதிவியலுக்கான மென்பொருள் இப்போது வருகின்ற புதிய மேம்பட்ட இயக்கமுறைமைக்கு தகுந்தவாறு இவை ஒத்தியங்க மறுக்கும் நிலையில் இவ்வாறு புதிய இயக்கமுறைமையுடன் எதற்காக போராடுவது என்ற நிலையை தவிர்த்து கணக்கு பதிவியல் செயல்களுக்கு மட்டும் பழைய தனியாள் கணினியையே பயன்படுத்தி கொள்ள முடியும்.
9. அச்சிடும் மேலாளர் (printer manager) : அதிக அளவு அச்சிடும் பணிக்காக ஏராளமான அச்சுப்பொறிகளை பயன்படுத்தும்போது அன்றாட மற்ற பணிகள் எதுவும் பாதிக்காமல் இருப்பதற்காக பழைய கணினியுடன் அனைத்து அச்சுப்பொறிகளையும் இணைத்து அச்சுப்பணிக்கு மட்டும் தனிபணியகம் போன்று பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக window 98/xp அல்லது லினக்ஸ் இயக்கமுறைமை இருந்தால் போதும். மேலும் parallel port இணைப்பில் செயல்படும் அச்சுப்பொறிகள் புதிய இயக்க முறைமையில் ஒத்தியங்காமல் தகராறு செய்வதைஇதன்மூலம் தவிர்க்கலாம்.
10. தகவல் மையம் (knowledge center): Adobe acrobat reader, Encanta Encyclopedia போன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு இணையத்தில் செய்திகள்,இணையபக்கங்கள், மின்செய்தி தாட்கள், மின் ஆவணங்கள் ஆகியவற்றை படித்தறிவதற்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஏன் நம்முடைய பிள்ளைகளை Encyclopedia மூலம் தகவல் சேகரிக்கும் செயலுக்கு பயன்படுத்துமாறும் செய்ய முடியும். மேலும் ஆய்வு மாணவர்களுக்கு தகவல்களை, செய்திகளை தேக்கி வைத்து கொள்ளும் களமாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும்.
11. மென்பொருட்களின் பரிசோதனை மையம்(Software test bed ): மென்பொருள் வடிவமைப்பாளர், ஆலோசகர்போன்றவர்கள் உருவாக்கும் புதிய மென்பொருட்களை நடைமுறைப்படுத்தும் முன்பு வெவ்வேறான அமைவுகளில் இவைகள் எவ்வாறு இயங்குகின்றன.என்றும் அதன் இறுதி விளைவு எவ்வாறு இருக்கும் எனவும் பரிசோதித்து பார்க்கின்ற களமாக நம்முடைய பழைய கணினியை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் மென்பொருட்களை நடைமுறைப் படுத்தும்போது என்ன ஆகுமோ என்ற பயமில்லாமல் நிம்மதியாக இந்த செயலுக்கு உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
12. மின்னஞ்சல் பணியகம் : Mail gate, mail daemon அல்லது ability main serverபோன்ற மென்பொருட்களை பழைய கணினியில் நிறுவிக்கொண்டு வளாக பிணையத்தின் மூலம் (LAN) மற்ற கணினிகளை இணைத்து மின்னஞ்சல்களை அனுப்பி வைக்கவும் பெறவுமான பணியகம் போன்று பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் நேரடியாக இணையத்தில் சென்று மின்னஞ்சல்கள் பெறுவது அனுப்புவது ஆகிய செயல்களின் நெருக்கடிகளை தவிர்த்து கொள்ள முடிகிறது. scanning செய்தல்,, spyware கட்டுப்படுத்துதல் என்பன போன்றபல முன்னெச்சரிக்கை செயல்களை பழைய தனியாள் கணினியில் செயல்படுத்தி அதன்பிறகு மற்ற கணினியில் கோப்புகளை எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
13. இணைய இணைப்பு கட்டுப்பாட்டகம்: நம்முடைய பிள்ளைகள் இணையத்தில் தவறான வழிகளில் உலாவுதலை கட்டுப்படுத்த பழைய கணினியின் வழியாக அனைத்து வகையான வடிகட்டுதலையும், கட்டுப்பாடுகளையும் பயன்படுத்தி இணையத்தில் பாதுகாப்பாக பயமின்றி உலாவும்படி செய்ய முடியும்.
14. CD/DVD யில் நகலெடுக்கும் பணியகமாக : ஒரே மாதிரியான கோப்புகள் மென்பொருட்களை ஆயிரக்கணக்கான CD/DVD களில் நகலெடுக்கும் பணிக்காக CD/DVD Writer பணியகமாக உங்கள் பழைய கணினியை மாற்றியமைத்து கொள்ளலாம். இதற்காக CD/DVD Writer மட்டும் வாங்கி கணினியில் பொருத்தி கொண்டால் போதும்.
15. தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்த : நம்முடைய அலுவலகத்தில் தொலை நகல் இயந்திரம் பழுதுபட்டுவிட்டநிலையில் புதியதாக அதனை கொள்முதல் செய்ய வேண்டாம். நம்முடைய பழைய கணினியையே தொலைநகல் இயந்திரமாக பயன்படுத்தி கொள்ள முடியும். அதற்காக Fax/voice/modem ஆகியவற்றுடன் ஒத்தியங்கும் மென்பொருட்களை bitware of super voice பயன்படுத்தி தொலைபேசி இணைப்பை கணினியுடன் மோடத்தின் மூலம் ஏற்படுத்தி கொண்டு கணினியை எப்போதும்போல் வைத்து கொண்டால் போதும்.தொலை நகல் இயந்திரம் போன்று இந்த பழைய தனியாள் கணினியே மிகச்சிறப்பாக பணிபுரியும்.
16. கண்காணிப்பு பாதுகாப்பு சாதனமாக : கடைகளில் அல்லது நம்முடைய நிறுவனத்தில் விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அவ்வப்போது கண்காணித்து கொண்டே இருக்க வேண்டிய நிலைஏற்படும் இதற்கான அட்டைகளை பழைய கணினியில் யுஎஸ்பி பொருத்துவாய் மூலம் பொருத்தி ஆங்காங்கு கண்காணிப்பு கேமராக்களை அமைத்து இதனுடன் இணைத்து இந்த அமைப்பை பயன்படுத்தி நம்முடைய விலை மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக இருந்திடுவதற்காக கண்காணிக்கலாம். இதற்காக capturing video spy என்ற மென்பொருள் பயன்படுகிறது.
17. பயிற்சி மையம் (Traning center) இளைய தலைமுறை மாணவர்கள் கணினியை ஒருங்கிணைத்தல் (assembly) பிரச்சனையை சரிசெய்தல் (trouble shooting) போன்ற செயல்களுக்கான பயிற்சியகமாக பழைய கணினியை உபயோகப்படுத்தி கொள்ள முடியும்.
இதுவரை எவ்வாறு பழைய கணினியை பயனுள்ளதாக செய்ய முடியும் என எனக்கு தெரிந்த ஒரு சில கருத்துக்களை மட்டும் கூறியுள்ளேன். மேலும் பயனுள்ள பல பணிகளுக்கும் பயன்படுத்தி கொள்ள முடியும் என நம்புகிறேன். நீங்களும் பழைய கணினியை குப்பையில்தூக்கி எறியாமல் பயனுள்ள வகையில் உபயோகப்படுத்தி கொள்ளுங்கள்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home