14 September 2013

மூன்று என்ற சொல்லினிலே...



மிகக் கடினமானவை மூன்றுண்டு:



1.
இரகசியத்தை காப்பது.

2.
இழைக்கப்பட்ட தீங்கை மறப்பது.

3.
ஓய்வு நேரத்தை உயர்ந்த வழியில் பயன்படுத்துவது.



நன்றி காட்டுவது மூன்று வகையிலாகும்:

1.
இதயத்தால் உணர்தல்.

2.
சொற்களால் தெரிவித்தல்.

3.
பதிலுக்கு உதவி செய்தல்.



மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியவை மூன்றுண்டு:

1.
சென்றதை மறப்பது.

2.
நிகழ்காலத்தை நேர்வழியில் செலுத்துவது.

3.
வருங்காலத்தைப் பற்றிச் சிந்திப்பது.



இழப்பு மூன்று வகையிலுண்டு:

1.
சமையல் அமையாவிட்டால் ஒருநாள் இழப்பு.

2.
அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு.

3.
திருமணம் பொருந்தாவிட்டால் வாழ்நாள் முழுவதும் இழப்பு.



உயர்ந்த மனிதனின் வாழ்வு மூன்று வகையில் இருக்கும்:



1.
அவன் ஒழுக்கத்தோடிருப்பதால் கவலையற்றிருப்பான்.

2.
அவன் அறிவாளியாயிருப்பதால் குழப்பங்களற்றிருப்பான்.

3.
அவன் துணிவாக இருப்பதால் அச்சமின்றியிருப்பான்.

Thanks Challaram


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home