ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற விஞ்ஞானி வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானகாந்தி.
இவர் டீசல், காஸ் ஏதுமின்றி ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்தை வடிவமைத்துள்ளார்.
இதனையடுத்து விஎஸ்எஸ்சி, டாடா மோட்டார்ஸ், இஸ்ரோ அதிகாரிகள் முன்னிலையில், சுமார் 1 மணிநேரம் பேருந்தை இயக்கி காட்டினார்.
இதுகுறித்து விஞ்ஞானி ஞானகாந்தி கூறியதாவது, இந்த பேருந்து ஹைட்ரஜன் வாயு
மூலமாக ஓடுவதால், 1 சதவிகிதம் கூட புகை மாசுவை ஏற்படுத்தாது.
குறைந்த அளவில் ஓசை மட்டும் வெளிப்படும், பேருந்தின் மேல் பகுதியில் சிலிண்டர்கள் இடம்பெற்றிருக்கும்.
இதில் இருந்து குழாய்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்தி பேருந்தின்
பின்பகுதியில் உள்ள நவீன கருவிகள் மூலம் ஹைட்ரஜன் வாயு உருவாகி இயங்கும்.
8 சிலிண்டர்களில் உள்ள தலா 30 கிலோ ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி 220 கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனகே இஸ்ரோ குழுவினர் மற்றும் டாடா வாகன உற்பத்தி நிறுவனத்தின் துணை
பொது மேலாளர் ராஜா தலைமையிலான குழுவினர் ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் மெகா
சைஸ் வால்வோ பேருந்தை தயாரிக் கும் பணியில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு
வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home