10 September 2013

கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவு !!



கணவன் - மனைவி என்ற உறவு இருக்கிறதே சுபஹானல்லாஹ்!!! எவ்வளவு ஒரு அழகிய உறவு !!
தற்போது இந்த உறவில் இணைந்த இணையபோகும் என் நண்பர்களுக்கு இந்த பதிவு !!
இந்த திருமண அழகிய பந்தத்தை நிக்காஹ் என்ற கடுமையான திருமண ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்திக்கொல்கிரோம் நாம்!!
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில், திருமணத்திற்கான செலவினங்களுக்குச் சக்திப்பெற்றவர் திருமணம் செய்யட்டும்; ஏனெனில் திருமணம் (அன்னியப் பெண்களைப் பார்ப்பதைவிட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரின் இச்சையைக் கட்டுப்படுத்தும்." என அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
பெண்களுக்கு அவர்கள் மணக்கொடைகளை (மஹரை)கட்டாயமாக கொடுத்து விடுங்கள். அவர்களாக மனமுவந்து அதில் ஏதேயெனும் விட்டு தந்தால் மனநிறைவுடனும், மகிழ்வுடனும் உண்ணுங்கள். (அல்குர்ஆன் : 4:4 ) ஒரு குவியலையே மஹராக நீங்கள் அவர்களுக்கு கொடுத்தாலும் அதை திரும்ப பெற இயலாது. ( அல்குர்ஆன் : 4:20 ) மஹர் தொகையை தீர்மானிக்கும் உரிமை பெண்களிடம் விடுப்பட்டுள்ளதால் அவர்கள் விரும்பினால் அதை விட்டுத்தரலாம். அல்லது தவணை முறையில் பெற்றுக் கொள்ளலாம்.(அல்குர்ஆன்2:237
எவ்வளவு அழகான விஷயத்தை நம் இஸ்லாம் நமக்கு ஏற்படுத்தி உள்ளது !!
இது போன்று நபி(ஸல்) அவர்கள் காட்டி தந்த வழி முறையில் பெண்ணிற்கு தகுந்த மஹரை கொடுத்து, வரதட்சணை ஏதும் வாங்காமல் விருந்து உபசரிப்புகள் மட்டுமே கொண்டு எளிய முறையில் திருமணம் முடிப்பவர்களை மனதார வாழ்த்தி வரவேற்கிரைன் மற்றும் திருமானவர்களைவும் நான் வாழ்த்தி வரவேற்கிரைன்.



இன்ஷா அல்லாஹ் இறவன் எனக்கும் இந்த பாக்கியத்தை வழங்குவானாக!!நம் நிய்யத்து நல்லவிதமாக இருப்பின் அதை அல்லாஹ் நிச்சயம் நாடுவான் என நம்பிக்கை கொள்வோம்...
வஸ்ஸலாம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home