18 September 2013

அமைச்சர்கள் அடிக்கடி மாற்றப்படுவது குறித்து முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள கலக்கலான காமெடி கதை.




''எங்க ஊரு பள்ளிக்கூடத்துல ஒரு பரீட்சை. கேள்வித்தாளில் ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க. 'தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி அமைச்சர் யார்?’

பையன் பதில் எழுதினான். 'மாண்புமிகு சி.வி.சண்முகம்.’

மறுநாள் வாத்தியார் அவன் பேப்பரை திருத்திக் கையில் கொடுத்தார். பையனுக்கு ஷாக்! அவன் எழுதின பதிலுக்கு 'தவறுஎன்று போட்டு இருந்தார். பையன் நேரே வாத்தியார்கிட்ட போனான்.

'
ஏன் சார் என்னோட விடைக்கு தப்பு போட்டீங்க?’

'
டேய்... பள்ளிக் கல்வி மந்திரி சண்முகம் இல்லடா. இன்னைக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்திதான்டா மந்திரி... பேப்பரை பார்க்கல?’

பையனுக்கு கோபம் வந்துடுச்சு.

''
அதெப்படி சார்... நேத்து நீங்க கொஸ்டின் பேப்பர் கொடுக்கும்போது சண்முகம்தானே சார் மந்திரி... அதுதான் அவர் பெயரை பதிலாகச் சொன்னேன். இன்னைக்கு நீங்க திருத்தும்போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி மந்திரின்னா நான் என்ன சார் பண்றது? எனக்கு அதெல்லாம் தெரியாது. நான் எழுதும்போது சண்முகம்தான் மந்திரி.. எனக்கு மார்க் போடுங்க!''
இப்போ வாத்தியாருக்கு தர்ம சங்கடமாப் போச்சு!

ஹெட்மாஸ்டர் வரைக்கும் பஞ்சாயத்து போச்சு. ரெண்டு பேரையும் பாத்து அவர் சொன்னார், ''என்னய்யா, சுத்த வெவரம் கெட்ட ஆளுங்களா இருக்கீங்களே... நம்ம மந்திரி சண்முகமும் இல்லை... அக்ரியும் இல்லை... இப்போ லேட்டஸ்ட் நியூஸ் தெரியுமா? நம்ம மந்திரி சிவபதி. போய் வேலையைப் பாருங்க!''

அந்த சமயம் அங்கே விசிட் வந்த சி... இந்தக் கூத்தை கதவு ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தார்.
அவர் ஹெட்மாஸ்டர்கிட்ட சொன்னாரு, ''நல்லா இருக்குய்யா உங்க ஜெனரல் நாலேஜ். சிவபதி மாறி ரெண்டு மணி நேரம் ஆச்சு... இப்போ வைகைசெல்வன்னு ஒருத்தர்தான் நம்ம மந்திரி!’

ஹெட்மாஸ்டர் சந்தேகமாய் இழுக்க... உடனே டைரக்டருக்கு போன் பண்ணி சந்தேகத்தைச் சொன்னாரு சி... அதுக்கு டைரக்டர் சொன்னாரு... 'என்ன டிபார்ட்மென்ட்ய்யா இது... வைகைசெல்வனை மாத்தி அரை மணிநேரம் ஆச்சு. இப்போதைக்கு மந்திரி பழனியப்பன்னு ஃப்ளாஷ் நியூஸ் ஓடுதே பாக்கலையா..!’னு கேட்டுட்டு கட் பண்ணிட்டார்.

பியூனைக் கூப்பிட்டு, 'ஒரு பொக்கே வாங்கிட்டு வாய்யா... புது மந்திரியைப் பார்க்கப் போகணும்’ - டைரக்டர் சொன்னார். அதற்கு பியூன் சொன்னார்... 'சார் எதுக்கும் ரெண்டு பொக்கே வாங்கிட்டுப் போங்க... அமாவாசை முடிய இன்னும் அரை நாள் இருக்கு!’

பின் குறிப்பு: கதையைப் படித்தவர்களுக்கு ஒரு டெஸ்ட். இதுவரை எத்தனை மந்திரிகள் மாற்றப் பட்டுள்ளனர்? டக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்!

via
Thangam Thenarasu - தங்கம் தென்னரசு

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home