18 September 2013

அசையாத சுவர்களும்…ஆபாசக் காட்சிகளும்!



எந்தப் பக்கம் திரும்பினாலும்…. சுவர் கண்ட இடமெல்லாம் போஸ்டர்கள்.

அரசியல் போஸ்டர் அல்லது ஆபாசப் போஸ்டர் என இரண்டில் ஏதாவது ஒன்றை ஒட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள். ( இரண்டுமே ஒன்றுதான் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!)

பள்ளிக்கூடம் செல்லும் பாதையாக இருந்தாலும் சரி, கோவிலுக்குச் செல்லும் வழியாக இருந்தாலும் சரி…. அது எது பற்றியும் கவலைப்படாமல், ஒட்டுவதற்கு வசதியாகச் சுவர் கிடைத்தால் ஒட்டிவிட்டுப் போய்விடுகிறார்கள்.

பாபிலோனாவையும் ஷகிலாவையும் பார்த்துக்கொண்டு பள்ளிக்குழந்தைகள் போகட்டுமே என்கிற அக்கறை இங்கு எல்லோருக்குமே இருப்பதால் யாரும் தட்டிக்கேட்பதும் கிடையாது.

கர்ச்சீப்பை மட்டும் கட்டிக்கிட்டு நடிச்சாத்தான் காசு கொட்டுதுன்னு அவங்க நடிக்கிறாங்க. அந்த மாதிரி படத்தை ஓட்டுனா மட்டும்தான் பணத்தை அள்ள முடியுதுன்னு இவங்க ஓட்டறாங்க. இடையில மாட்டிக்கிட்டு இந்தப் பரிதாபத்துக்குரிய சுவரும் நாங்களும் என்னய்யா பாவம் பன்ணினோம்?

ஆட்டோகிராப் நல்லாத்தானே ஓடுச்சு. சுப்பிரமணியபுரம் வசூலை அள்ளி எடுக்கலையா. இப்படி எத்தனயோ படங்கள் மக்கள் மனசுக்குள்ளே போய் உட்காரலையா? துப்புரவாக் கதையே இல்லாம, தொடையையும் தொப்புளையும் மட்டும் காட்டுனாப் போதும்கிற கணக்கோட படம் எடுத்தா எப்படி? காமராஜரைப் பத்தியே படம் எடுக்கச் சொன்னாலும், அதிலேயும் ஒரு காபரே டான்ஸ் வைக்காம எடுக்க மாட்டாங்க போல இருக்குது.

இம்சை தாங்க முடியாத அளவுக்கு ஏடாகூடமாகப் பெயரை வைத்துக்கொண்டு என்னென்னமோ படங்களும் கதைகளும் வருகின்றன. கணவனின் தம்பியை விரும்பும் அண்ணி ஒருத்தியை மையமாக வைத்துஉயிர்படமும், மாமனாரை விரும்பும் மருமகளை மையமாக வைத்துசிந்து சமவெளிபடமும், இளம்பெண் ஒருத்தியைப் பலான நோக்கத்தில் இம்சிக்கும்மிருகம்படங்களும் வந்தன. இப்படங்கள் சர்ச்சைகளில் சிக்கினாலும் கூடத் தயாரிப்பாளர்களை நஷ்டப்படாமல் காப்பாற்றி விட்டது என்று கோலிவுட்டில் அப்போது பேசப்பட்டது.

இவைகள் அல்லாது, தமிழகத்தையே ஒரு ரவுண்டு கலக்கியெடுத்தஅவளோட ராவுகள்”, “மாமனாரின் இன்பவெறி”, ‘அஞ்சரைக்குள்ள வண்டிபோன்ற மலையாள வாசம் கொண்ட படங்களும் நாம் அறியாதவைகளல்ல. இப்படங்களின் சுவர் விளம்பரங்களில், அரை குறை ஆடைகளுடன் (அதுகூட சில சமயங்களில் இருக்காது) நடிகைகள் மல்லாந்து படுத்திருப்பார்கள். விட்டால் பள்ளிக்கூடத்தின் காம்பவுண்டு சுவரிலேயே இதையும் ஒட்டிவிடுவார்கள்.

அரசாங்கம், நீதிமன்றம் ஆகிய இருவரும் தலையிட்டாலொழிய, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு இப்போதைக்குக் கிடைக்காது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home