20 October 2013

ஆன்லைனில் 360 டிகிரி கோணத்தில் உங்கள் தெருவை ‘லைவ்’வாக பார்க்க வந்து விட்டது வசதி












 உங்கள் தெருவை  அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 டிகிரி கோணத்தில் முப்பரிமாணத்தில் பார்த்து, எந்த முகவரிக்கு போக வேண்டுமோ அதை அறிந்து கொள்ள இனி நீங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கேட்க வேண்டாம். வந்து விட்டது ஆன்லைன்  வசதி. வோனோபாசைட்டுக்கு போங்க, நீங்கள் எந்த பகுதியையும் துல்லியமாக பார்க்கலாம்.அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களைலைவ்வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது. இந்தியாவில் உள்ள பல நகரங்களில் உள்ள தெருக்களையும் துல்லியமாக லைவ்வாக காட்ட முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதுவரை அதை செய்ய முடியவில்லை. இந்தியாவின் முக்கிய பகுதிகளில் கூகுள் கண்காணிக்க மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கவில்லை.   இந்த நிலையில், ஜெனிசிஸ் நிறுவனம் இதற்கான ஏற்பாட்டை இப்போது செய்துள்ளது.

பெங்களூரில் உள்ள தன் அலுவலகத்தில் சோல் மற்றும் சஜித் மாலிக் அறிமுகம் செய்து வைத்தனர்.   இவர்களின் நிறுவனம் ஜெனிசிஸ், ஏற்கனவே இந்திய நகரங்களில் , பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட இடங்களில் மேப்பிங் செய்யும் பணிகளில் இறங்கி உள்ளது.பெங்களூர், மும்பை, சென்னை உட்பட 54 நகரங்களில் இந்த நிறுவனம் ஒவ்வொரு தெருவையும் துல்லியமாக ஆன்லைனில் காட்டுவதற்கானமேப்பிங் ஏற்பாடுகளை செய்துள்ளது.  மேலும் 42 நகரங்களில் உள்ள தெருக்களை ஆன்லைனில் துல்லியமாக பார்க்கும் வசதியை செய்ய உள்ளது. தெருக்களை 360 டிகிரி கோணத்தில் பார்ப்பதுடன், அங்குள்ள ஓட்டல், தபால் அலுவலகம், வங்கி என்று மக்களுக்கு தேவையான இடங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றை தேடி பார்க்கலாம். குறிப்பிட்ட தெருவை ஆன்லைனில் கண்டுபிடித்து அதை பெரிதாக்கி, அங்குள்ள குறிப்பிட்ட ஓட்டல், அலுவலகம் போன்றவற்றை துல்லியமாக பார்க்கலாம். தகவல்களுக்கு  wonobo.com     வெப்சைட்டுக்கு போய் பார்க்கலாம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home