அமெரிக்க அரசு முடங்கியதால் என்னென்ன பாதிப்புகள் “50 பாதிப்புகள்”
அமெரிக்க அரசு முடங்கி
இன்றோடு 10 நாட்கள் ஆகப் போகிறது.
நாட்டின் அரசாங்கமே அப்படியே ஸ்தம்பித்து நிற்கிறது.
ஒவ்வொரு நாள் முடியும் போதும் ஏதாவது
ஒரு சேவை செயலிழப்பதைப் பார்த்து வருகிறார்கள் மக்கள்.
ஆரம்பத்தில் இது சில நாட்களுக்குத்தான் என்ற
நினைப்பிலிருந்தவர்கள், ஒரு
வாரத்தைத் தாண்டியதுமே பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து வருகிறார்கள்.
ஆபத்துக்காலத்தில் மக்களுக்கு உதவ இயங்கும்
தன்னார்வத் தொண்டு அமைப்புகள் கூட, அரசுத்
தரப்பிலிருந்து வரவேண்டிய நிதியுதவி இல்லாத காரணத்தால் முடங்கிப் போயுள்ளன.
கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள்
இல்லாமல் வெறிச்சோட ஆரம்பித்துள்ளன. அரசின் ஆராய்ச்சிக் கூடங்கள் படிப்படியாக மூடப்பட்டு
வருகின்றன.
அமெரிக்காவின் மிக முக்கியமான அமைப்பு,
வானியல் ஆய்வு மையம்.
எங்கே எப்படிப்பட்ட புயல் தாக்கப் போகிறது என்பதை தெளிவாகக் கணித்து ஆபத்தைக் குறைக்கும்
இந்த அமைப்பும் இப்போது மூடப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் புயல்
தாக்கினால் அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யக் கூட வழியில்லை என அந்த அமைப்பின்
தலைவர் அதிர்ச்சி
வெளியிட்டுள்ளார்.
சம்பளமில்லாதால் அரசு ஊழியர்களின்
குடும்பங்கள் திண்டாடுகின்றன. அன்றாட செலவுகளைச் சமாளிக்க முடியாமல் புலம்ப
ஆரம்பித்துள்ளன.
இப்படி அரசு முடங்கியதால்
அமெரிக்கர்கள் சந்தித்து வரும் 50 பாதிப்புகள்…
1. அமெரிக்காவின் பெரிய பிரச்சினைகளில் ஒன்று
எல்லைகளில் பக்கத்து நாட்டுக்காரர்களின் ஊடுருவல். அரசு முடக்கம் காரணமாக
நியூ மெக்சிகோ எல்லைப்புறத்தில் ஊடுருவலை கண்காணித்த வீரர்கள் வீட்டுக்கு
அனுப்பப்பட்டுள்ளனர்.
2. அரசின் நிர்வாகக் கடன் பெற்று நடந்து கொண்டிருந்த
பல வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் ஹாட் டாக் போன்ற கடைகளும் அடங்கும்.
3. பால் உற்பத்தியாளர்களுக்கான பட்ஜெட்
தொகைக்கு அரசு அனுமதி தராததால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
4. இந்த வாயசான பார்ட்டிங்களுக்காக இளம்
பெண்களை டேட்டிங்குக்கு ஏற்பாடு செய்து தரும் இணையதளங்களுக்கு 50 சதவீத பாதிப்பாம்.
5. டெக்சாஸ் போன்ற மாநிலங்களில் ரயல் எஸ்டேட்
பிஸினஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாம். சேமிப்புகளை வைத்து நிலம் வீடு
வாங்கியவர்கள், இப்போது
அந்த சேமிப்புகளை அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே பயன்படுத்த வேண்டிய நிலை
6. மிசௌரி போன்ற மாநிலங்களில் சீனியர் மாணவர்கள்
பெற்றுவந்த அரசு உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
7. அரசு முடக்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள
வனத்துறை, மீன்
வளத் துறையின் கண்காட்சியகங்கள், உயிரியல்
பூங்காக்கள், சரணாலயங்கள்
மூடப்பட்டுள்ளன. இலனாய்ஸ், அயோவா,
இந்தியானா, மிச்சிகன், மின்னசொட்டா, ஒஹையோ, மிசௌரி, விஸ்கான்சினில் எந்த சரணாலயங்களும்
இயங்கவில்லை.
8. அமெரிக்காவின் மூங்கில் வெட்டி விற்கும்
தொழில் கூட அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது, அரசின் நிதி உதவி நிறுத்தத்தால்.
9. அமெரிக்காவின் பல பகுதிகளில் சுற்றுலா ஒரு
பெரும் தொழில். உதாரணத்துக்கு மாண்டனா நகரம் சுற்றுலா பயணிகளே வராமல் பேய்
நகராகக் காட்சி தருகிறதாம்.
10. ஸ்மித்சோனியன் தேசிய
அருங்காட்சியகத்துக்கு அனுப்பவேண்டிய டயனோசர் தொன்னுயிர் படிமங்களை அனுப்புவதில்
தாமதமேற்ப்பட்டு வருகிறது.
11. யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவுக்கு ரெகுலராக
நடக்கும் தனியார் பயணங்கள் கனவில் கூட நினைக்க முடியாத அளவுக்கு குறைந்து
போய்விட்டனவாம்.
12. ஆண்டுதோறும் வர்ஜினாவின் கிழக்குக்
கடற்கரையில் மேற்கொள்ளப்படும் குதிரைக் குட்டிகளின் கணக்கெடுப்பு ரத்து
செய்யப்பட்டுள்ளது.
13. அரசு கட்டடங்கள், நிலங்களில் இயங்கும் தனியார் ஓட்டல்கள்
வாடிக்கையாளர்களே இல்லாமல் திண்டாட ஆரம்பித்துள்ளன.
14. கால்நடைத் துறை பணியாளர்களும்
சம்பளமில்லா விடுப்பில் போய்விட்டதால் கால்நடைகளுக்கு தீவணம் இல்லாத நிலை.
15. அரிசோனாவில் வறுமையில் தவிக்கும் 5200
குடும்பங்களுக்குத்
தர வேண்டிய உதவிப் பணமும் நிறுத்தப்பட்டுள்ளது.
16. கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கில் நடந்து
வந்த தனியால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
17. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய அலுவலர்கள்தான்
மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நாளாக நாளாக நிலைமை மோசமாவது, நோய் தடுப்பு நடவடிக்கைகள பாதிக்கும்
என்கிறார்கள்
18. மெய்னே பகுதியில் சம வேலைவாய்ப்பு ஆணையத்தின்
சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் தாமதமாகியுள்ளன.
19. பல லட்சம் பேர் ஆர்வத்துடன் பார்க்கும்
நாசா இணையதளமும் முடக்கப்பட்டுள்ளது.
20. பர்மிட்டுகள் மற்றும் கோட்டாவுக்கான அரசு
அனுமதி கிடைக்காததால் அலாஸ்கா மீனவர்களின் படகுகள் கரையில் நிற்கின்றன. மெகா சைஸ் நண்டுகள்
பிடிக்கும் தொழில் உள்ள ஒவ்வொரு மீனவருக்கும் பல ஆயிரம் டாலர் இதனால்
இழப்பு.
21. துருவப் பகுதியான எவர்கிளேட்ஸை மறு
சீரமைக்க நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த பணிகளும் முடங்கியுள்ளன.
22. கென்டுகியில் உள்ள ஆபிரகாம் லிங்கன்
பிறந்த இடத்துக்கு தினசரி நடக்கும் சுற்றுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
23. அமெரிக்காவில் பிறந்து மேற்படிப்பு
படிக்கும் பல அமெரிக்க மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் நிறுத்தப்பட்டுள்ளது
24. வறுமையில் வாடும் அமெரிக்கர்கள் மற்றும
முதியோருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவு, நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளது.
25. அரசு வழங்கி வந்த ஆராய்ச்சி நிதி
நிறுத்தப்பட்டதால் ஒரெகான் மாநில பல்கலைக் கழகத்துக்கு தினசரி 6 லட்சம் டாலர் இழப்பாம்.
26. ஒரெகானில் நாய்களுக்கான பூங்காக்களில்
பணியாற்றும் வாலன்டியர்கள் பணிக்கு வரவில்லை.
27. அரசின் நிதி கிடைக்காததால் மெடிகேர்
திட்டத்தின் ஆடிட்டிங் பணிகள் தாமதமாகின்றன.
28. தங்களிடமுள்ள கால்நடைகள் மற்றும்
தீவனங்களை விற்பதா வேண்டாமா என்ற முடிவை எடுக்க முடியாமல் விவசாயிகள்
தடுமாறுகின்றனர்.
29. கொலராடோ நதியில் அதிவேக படகு சவாரிக்காக
20 நாள் பயணம் போன இரு
குடும்பங்கள் அரிசோனா பார்க்கிங்கில் தவிக்கிறார்கள்.
30. அரசு உதவி கிடைக்காததால் லக்கீத்
மார்டின் நிறுவனம் தனது 3000 பணியாளர்களை
தற்காலிகமாக நீக்கியுள்ளது.
31. கொலராடோவில் நடக்கவிருந்த மேவ்ரிக் பைக்
சேம்பியன்ஷிப் போட்டிகளில் இரண்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது.
32. விவசாய உதவித் தொகைகள்
நிறுத்தப்பட்டதால் ஜார்ஜியாவில் பருத்திப் பயிரிடுதல் பாதிக்கப்பட்டுள்ளது.
33. பாதுகாப்புத் துறை அலுவலகங்களுக்காக
வர்ஜீனியாவில் உருவாக்கிய நர்சரி செடிகள் இறக்கும் அபாயத்தில் உள்ளது.
34. வாஷிங்டனில் நடக்கும் விபத்து
மரணங்களைக் கூட புலனாய்வு செய்ய முடியவில்லை காவல் துறையினரால்.
35. தேசிய பாதுகாப்பு ஏஜென்ஸியின் வழக்கில்
நீதித்துறையால் தீர்ப்பு வழங்க முடியாத நிலை.
36. வாஷிங்டனில் உணவுப் பொருள் கொண்டு
செல்லும் பல ஆயிரம் வாகனங்கள் வேலையின்றி நிறுத்தப்பட்டுள்ளன.
37. யுனைடட் டெக்னலாஜில் கார்ப் தனது 5000
ஊழியர்களை கட்டாய
விடுப்பில் அனுப்பிவிட்டது.
38. ப்ளோரிடாவில் கடல் ஆமைகளைக்
கண்காணிக்கும் பணியும் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.
39. பட்ஜெட் இல்லாததைக் காரணம் காட்டி டென்னஸியில்
ப்ளௌன்ட் கன்ட்ரி பள்ளிகள் பஸ்களை நிறுத்திவிட்டதால் குழந்தைகளால் பள்ளிகளுக்கு செல்ல
முடியவில்லை. பஸ்களை நிறுத்திவிட்டாலும் பள்ளிகளை மட்டும் திறந்திருந்ததால்
குழந்தைகளை அனுப்ப திண்டாடினர் பெற்றோர்.
40. சிட்ரஸ் பழங்களின் வரத்து குறித்த
முன்கணிப்பை அரசு மையம் நிறுத்தியுள்ளதால் ப்ளோரிடா விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
41. அரசின் நிதியுதவி கிடைக்காததால் கான்சாஸ்
சிட்டியின் வீட்டு வசதித் துறையின் பல திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
42. அலபாமா ஹெல்த் கேர் க்ளினிக் புதிய நோயாளிகளுக்கு
சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் உள்ளது. நோயாளிகளுக்கு இலவச மருந்துகள் தர மருந்துக்
கம்பெனிகளுடன் உடன்பாடு செய்வதற்கும் அரசு முடக்கம் தடையாக உள்ளது.
43. ஒரு சிறுவனக்கு எடுக்க வேண்டிய
அத்தியாவசிய ரத்தப் பரிசோதனையைக் கூட செனட்டர் ஒருவர் தலையிட்ட பிறகே மருத்துவமனை
மேற்கொண்டது.
44. யுடாவில் வேலையின்மையின் அளவு 500
சதவீதத்தை
எட்டியுள்ளது.
45. பில்ட் அமெரிக்க பாண்ட் எனப்படும் வரிவிலக்குப்
பத்திரங்களுக்கான தொகையை நிதித்துறை செலுத்தாததால், மாநில மற்றும் நகராட்சி அமைப்புகள்
பாதித்துள்ளன.
46. வடக்கு டகோடாவில் மாணவரைக் கொன்ற
வழக்கில் விசாரணை தொடங்கப்படாமல் உள்ளது, காரணம்.. அரசு முடங்கியிருப்பதுதான்.
47. நிதித் தட்டுப்பாடு காரணமாக
பன்றிக்காய்ச்சல் நோய் கண்காணிப்பு பணிகளும் முடங்கியுள்ளன.
48. டென்னஸியில் ஒரு திருமணம் இடம் மாறியிருக்கிறது.
காரணம் அது நடக்கவிருந்தது ஒரு தேசிய பூங்கா. தேசிய பூங்காக்கள் அனைத்தும்
மூடப்பட்டிருப்பது நினைவிருக்கலாம்.
49. கிரேட் ஸ்மோகி மவுன்டெய்ன் நேஷனல்
பார்க்கின் பனி படந்த மலைகளுக்கு பயணம் செய்வோர் எண்ணிக்கையும் கணிசமாகக்
குறைந்துவிட்டதாம்.
50. அமெரிக்க அரசின் பல துறைகளைச் சேர்ந்த
270 இணைய தளங்கள் முற்றாக
இயங்கவில்லை. இ கவர்னன்ஸ் எனும் மின்னணுவியல் நிர்வாகத்தை நம்பி வாழும்
அமெரிக்கர்களுக்கு இது தலையாய பிரச்சினை.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home