தாஜ்மஹாலுக்குள் ‘செருப்பு’ விளம்பரம் : உலக அழகி மீது உள்ளூர் போலீசில் வழக்கு!
செருப்பு
பிய்ஞ்சிடும்’ என்கிற டயலாக் காதலிப்பவர்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம்.
ஆனால் இப்போது அதேமாதிரியான ஒரு செருப்பு விவகாரம் தான் காதலின் புனித
சின்னமாக விளங்கும் தாஜ்மகாலை அசிங்கப்படுத்தியிருக்கிறது.
உலக அழகியான ஒலிவியா கல்போ 10 நாள்
சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை வைத்து பிரபல செருப்பு நிறுவனம்
ஒன்று தனது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த அக்ர்மெண்ட் போட்டது.
இதற்கான படப்பிடிப்பு நேற்று தாஜ்மகாலில்
நடந்தது. உலக அழகி ஒலிவியா விதவிதமான மாடல்களில் செருப்புகளை அணிந்து
விளம்பரப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.
தாஜ்மகாலில் உள்ள ‘டயானசீட்’ என்ற இடத்தில் படமாக்கப்பட்ட இந்த செருப்பு விளம்பரம் இப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
தாஜ்மகாலின் உள்ளே எந்த படப்பிடிப்பும்
நடத்த அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தடையை மீறி உலக அழகியை வைத்து செருப்பு
விளம்பர படப்பிடிப்பு நடத்தியது பற்றி தாஜ்மகால் நினைவுச்சின்ன
அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உலக அழகி ஒலிவியா கல்போ மீது
உள்ளூர் ஆக்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீதான குற்றம்
நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ஆக்ரா
தொல்பொருள் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
தாஜ்மகாலை பார்க்கச் செல்லும் சுற்றுலா
பயணிகள் யாரும் செருப்பு அணிந்து செல்லக் கூடாது. புல்வெளி மற்றும்
தோட்டப்பகுதி வரை மட்டும் செருப்பு போட அனுமதி உண்டு. இந்த தோட்டத்தின்
மத்தியில்தான் ‘டயானா சீட்’ உள்ளது. உலக அழகி ஒலிவியா டயானா சீட்டில்
சந்தனத்தை பை நிறைய எடுத்துச் சென்று ஒய்யாரமாக அமர்ந்து போஸ் கொடுத்தார்.
செருப்பு மற்றும் சந்தன பையை அனுமதியின்றி
எடுத்துச் சென்றதாகவும் நினைவுச் சின்னத்தின் மீது அமர்ந்ததாகவும் உலக
அழகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home