11 October 2013

பாராளுமன்றத் தேர்தல் : ''கணிப்பு'



350 இடங்களில் பாஜகவுக்கு டெபாசிட் கிடைக்காது!

105 இடங்களில் மட்டும் தான் காங்கிரசுடன் பாஜகவுக்கு நேரடிப் போட்டி!

உள்ளூர் 'தாமரை'யை விட இத்தாலி 'ரோஜா'வுக்கே மவுசு அதிகம்!!!

1) தமிழகம், கேரளம், ஆந்திரம், ஒரிசா, மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றின் மொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை, 1700.

இவற்றில் தற்போது பாஜகவின் கைவசம் வெறும் 20 'MLA'க்கள் மட்டுமே உள்ளனர்.

பாஜவுக்கு இரண்டு சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ள இந்த மாநிலங்களின் மொத்த நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கை மிகச்சரியாக 200.

இந்த 200 எம்.பி. தொகுதிகளிலிருந்து பாஜகவுக்கு 3 பேர் தேறினாலே அதிகம்.

2) தமிழகம், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களின் முதன்மையான போட்டி என்பது அங்கு வலுவாக உள்ள பிராந்தியக் கட்சிகளுக்கு இடையில் தான்.

அதாவது ஜெயலலிதா - கலைஞர் - முலாயம் - மாயாவதி - நிதிஷ்குமார் - லாலு போன்றவர்களின் கைகள் ஓங்கியிருக்கும் மாநிலங்களின் மொத்த லோக்சபா தொகுதிகள் 160.

இந்த 160 எம்.பி. தொகுதிகளிலிருந்து பாஜகவுக்கு 10 பேர் தேறினாலே அதிகம்.

3) ஒரிஸ்ஸா, ஹரியானா, ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் போட்டி என்பது காங்கிரஸ் கட்சிக்கும் அங்குள்ள பிராந்தியக் கட்சிகளுக்கும் தான்.

இந்த மாநிலங்களின் மொத்த தொகுதிகள் 102.

ஆக 200+160+102= 462 இடங்களில் 20 தொகுதிகள் கூட பாஜகவுக்கு கிடைக்காது.

குஜாரத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள 100க்கும் குறைவான தொகுதிகளில் மட்டும் தான், பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் நேரடி மோதல் உள்ளது.

இந்த 100 தொகுதிகளில் 60 தொகுதிகளை பாஜக கைப்பற்றினாலும் கூட மொத்தமாக 80 எம்பிக்கள் மட்டுமே தேறுவார்கள்.

மறுபுறம்...

1) கர்நாடகா, மகராஷ்டிரா, டெல்லி, ஜார்கண்ட், ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் - பாஜக - பிராந்தியக் கட்சிகள் என மும்முனை போட்டியுள்ள 100 இடங்களில் 40 இடங்களையும்,

2) பாஜகவுடன் 100 இடங்களில் நேரடியாக மோதி 40 இடங்கள் மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றினாலும் கூட

3) பாஜக வாடையே இல்லாத கேரளம், ஆந்திரம், ஒரிசா, மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 120 இடங்கள் பெற்றாலும் கூட

காங்கிரஸ் கட்சி மிக எளிதான முறையில் (40+40+120=200) 200 இடங்களை கைப்பற்றி விடும்.

மற்ற கட்சிகள்:

கம்யூனிஸ்ட் கட்சிகள் 40

திமுக 15

அதிமுக 15

சந்திரபாபு நாயுடு 10

YSR காங்கிரஸ் 15

முலாயம் சிங் 35

மாயாவதி 15

மம்தா பானர்ஜி 20

நிதிஷ் குமார் 15

லாலு பிரசாத் 10

சிவசேனை 10

சரத் பவார் 10

அகாலி தளம் 5

தேமுதிக, பாமக, ராம்விலாஸ் பாஸ்வான், தேசிய மாநாட்டு கட்சி, முஸ்லிம் லீக் போன்ற இதரக் கட்சிகள் 30

என 245 முதல் 265 இடங்கள் வரை பெற்றாலும்,

இவர்களில் சிவசேனை 10, அகாலி தளம் 5, அதிமுக 15, சந்திரபாபு 10, என 40 பேர் தவிர, வேறு எவரும் பாஜகவுடன் சேர மாட்டார்கள்.

எனவே, மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமையவே அதிக வாய்ப்புள்ளது.


அலாவு தீன் பாராளுமன்றத் தேர்தல் : ''கணிப்பு'


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home