11 October 2013

உங்கள் பேஸ்புக் Account- ஐ எப்படி பாதுகாப்பாக வைப்பது?


இன்று இணையம் பயன்படுத்தும் அனைவரிடமும் இருக்கும் அக்கவுன்ட் எது என்றால் அது பேஸ்புக் தான். சமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது. இந்த தளத்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும். பன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர். இதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர். நம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.

பேஸ்புக் பிளேசஸ் இந்த தளத்தில் காணப்படும் ""பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது. ஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது. நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம். நீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும்.

பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது. எனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் காண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.

யாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.

தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த உங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.

எனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lockஎன்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். உங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும். நன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ளCustomize என்ற பிரிவின் மூலம் நீங்கள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.

அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா?

பேஸ்புக் தளத்தில் விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும். இது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும்.

பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும். இதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.

அப்ளிகேஷன்களுக்குத் தடா:

பேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது. பின் ஏன் வம்பு? எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே! அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும். Privacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applicationsஎன்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.

அணுகுவதற்குத் தடை:

 
உங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.

இறுதி நடவடிக்கை:

பேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள். இப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா? அப்படியே செய்துவிடலாம். இந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.php?show_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும். Submit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home