11 October 2013

ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்



ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

source :
சத்தியமார்க்கம்.காம்

மரியாதைக்குரிய ஆலிம்கள் இதன் அவசியத்தை நன்றாக உணர்ந்து ஜும்ஆ பயானை தீன் கல்வியோடு , சமுதாய பிரச்சினைகளையும் சொல்ல முன் வரவேண்டும் . இன்ஷா அல்லாஹ் ...

அன்புடன்
தக்கலை கவுஸ் முஹம்மத்



ஆயிரம் ஆண்டுகள்........
இந்தியாவை வழி நடத்திய பரம்பரை....
இன்று
மீடியாக்களால் அந்நியர் ஆக்கப்படுவதையும்.....

இஸ்லாமிய சமூகம்
இல்லாத பழிச் சொல்லுக்கு
இழுக்காக்கப் பட்டிருக்கும் அவலத்தையும்......

ஆலிம்கள்
பெரும் மக்கள் கூடும் ஜும்ஆ நாளில்
பயான் மூலம் விளக்கி.....
இஸ்லாமிய சமூகத்தை
விழிப்புணர்வுக்கு கொண்டு வர வேண்டும் ...!

ஆலிம்கள்
இன்னமும் கதைகளையும் கப்சாக்களையும் சொல்லி
ஜும்ஆவுக்கு வந்தவர்களை
தாலாட்டி தூங்க வைக்கும் வேலையை விட்டு விட்டு ......

இஸ்லாமிய சமூகத்தை
விழிப்புணர்வின் பக்கம்
கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டும் .....!

செய்வார்களா........?

அல்லாஹ்வே அறிந்தவன் .....!




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home