27 October 2013

எஸ்.எம்.எஸ் மூலம் மின்கட்டண விபரங்களைப் பெற வசதி....!!



எஸ்.எம்.எஸ் மூலம் மின்கட்டண விபரங்களைப் பெற வசதி....!!

கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொண்டால், மின் கட்டண விபரங்களை குறுஞ்செய்தி வழியாக தெரிந்து கொள்ளலாம்.

இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்...

மின் நுகர்வோர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தங்களுடைய கைப்பேசி எண்ணை பதிவு செய்து கொண்டால், குறுஞ்செய்தி வழியாக மின் கட்டண விபரம் மற்றும் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசித் தேதி போன்ற விபரங்கள் தெரிவிக்கப்படும்.

எனவே மின் நுகர்வோர், தங்களுடைய கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து இவ்வசதியை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home