26 October 2013

புகைப்பவர்கள் உலகம் பற்றிய ஒரு சுவாரசியமான பதிவு !!



1970 – ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன்தான் சிகரெட் டப்பாக்களின் மேல் எச்சரிக்கைவாசகம் எழுதும் சட்டத்தை கொண்டு வந்தார். அதன்பிறகு தான் சிகரெட் தொடர்பான டி.வி.விளம்பரங்களும் தடை செய்யப்பட்டன. உலகம் முழுவதும் சிகரெட் விற்பனை மூலம் ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் தொகை சுமார் 400 பில்லியன் டாலர்கள். மால்பரோ, கெண்ட், கூல், கேமல் எனும் நான்கு அமெரிக்க பிராண்ட் சிகரெட்டுகள் உலகில் 70 சதவீதம் சிகரெட் மார்கெட்டை பிடித்து வைத்திருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் முதன் முதலாக 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் குழந்தைகள் வரை சிகரெட் பிடிக்க பழகுகிறார்கள்.

தொடர்ந்து புகைபிடிக்கும் செயின் ஸ்மோக்கர்கள் தங்கள் ஆயுளில் ஏழு முதல் 14 வருட காலம் வரை இழுப்பார்கள் என்கின்றன, ஆராய்ச்சிகள். அதாவது ஒரு சிகரெட்டை இழுத்து முடிக்கும் போது ஆயுளில் 8 முதல் 15 நிமிடங்கள் வரை இழக்கிறார்கள்.

சீனாவில் மட்டும் ஒரு நிமிடத்துக்கு 30 லட்சம் சிகரெட்டுகள் புகைக்கபடுகின்றன. அங்கு தினமும் 3000 பேர் புகைப்பதால் இறந்து போகிறார்கள். சிகரெட் பிடிப்பதில் பெண்களும் சளைத்தவர்கள் அல்ல. இங்கிலாந்தில் 26 சதவீதம் பேர் புகை பிடிக்கிறார்கள். அமெரிக்காவில் இது 24 சதவீதமாக இருக்கிறது. ஆசிய பெண்களில் 4 சதவீதம் பேர் தைரியமாக புகை பிடிக்கிறார்கள். அமெரிக்காவில் இது 24 சதவீதமாக இருக்கிறது. இங்கிலாந்து, கொலம்பியா, இஸ்ரேல், நியுசிலாந்து, நார்வே, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் மரிஜூவானா என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி இருக்கிறது. இவர்களின் முக்கிய நோக்கமே சிகரெட், கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் மீதான கடுமையான சட்டங்களை நீக்குவதுதான். இப்படிப்பட்ட கொள்கைகள் இருந்தும் கூட இந்த கட்சியால் ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. ஆனாலும் சளைக்காமல் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

கனடாவில் பொது இடங்களில் அனுமதிக்கப்படும் அளவுக்கு கஞ்சா போன்ற போதை பொருட்களை உபயோகித்துக் கொள்ளலாம். நெதர்லாந்தில் போதை பழக்கம் என்பது பொது சுகாதாரம் குறித்த பிரச்சனை மட்டும்தான். கிரிமினல் குற்றம் எல்லாம் கிடையாது. அங்கு சர்வ சாதாரணமாக காபி கடைகளில் கூட கஞ்சா கிடைக்கும்.

போதைப்பொருட்கள் வைத்திருப்பதற்காக மக்கள் மீது வழக்கு தொடுப்பது சட்டவிரோதம் என்பது அர்ஜெண்டினா நீதிமன்றத்தின் தீர்ப்பு. தாங்கள் விரும்பும் வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை மக்களுக்கு உண்டு என்கிறது, அந்த தீர்ப்பு.

இந்தியாவில் குடிமகன்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள மாநிலம் குஜராத் மட்டும்தான். இங்கு 7 சதவீதத்துக்கும் குறைவான பேர்களே குடிக்கிறார்கள். அதிகமாக குடிப்பார்கள் அருணாச்சல் பிரதேசகாரர்கள். இங்கு 75 சதவீத மக்கள் குடிக்கிறார்கள். பெண்களில் 5 சதவீதம் பேர் குடிமகள்களாக இருக்கிறார்கள்.




0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home