மற்ற எந்தப் புரட்சியாளரையும்விட உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் சே குவேராவை அதிகம் விரும்புவது ஏன்?
சே குவேரா மட்டும்தான் நாடுகளைக் கடந்து போராடிய புரட்சியாளன். அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா விடுதலையில் பங்கேற்று பொலிவிய சுதந்திரத்துக்காகப் போராடியபோது சுட்டுக் கொல்லப்பட்டவர் சே. எல்லாப் புரட்சியாளர்களும் தங்களது நாட்டு எல்லைக்குள் தங்கள் நாட்டுக்காக மட்டும் போராடினார்கள். ஆனால் சே, நாட்டு எல்லைகளைக் கடந்தவர். பலவீனமான கால்கள், களைத்துப் போன நுரையீரல் கொண்ட சே, தனது மனவலிமையை மட்டுமே நம்பிப் புரட்சிக்களத்தில் இருந்தார். பிற புரட்சியாளர்கள் தங்களது லட்சியத்தை அடைந்ததும் அல்லது சம்பந்தப்பட்ட நாட்டின் அதிபர் ஆனதும் அமைதி யாகிவிடுவார்கள். ஆனால் கியூபா-வின் விடுதலைக்குப் பிறகு அந்த நாட்டின் தேசிய வங்கித் தலைவராக, ரூபாய் நோட்டுகளில் கையெழுத்துப் போடும் தகுதி படைத்தவராக, அதன்பிறகு தொழில் துறை அமைச்சராக இருந்த சே, அந்தப் பதவியைத் துச்சமெனத் தூக்கி எறிந்துவிட்டு, மீண்டும் ஒரு போரளியாக மாறி கெய்ரோ வழியாக காங்கோவுக்குள் போனது வரலாற்று அதிசயம். அதனால்தான் அவர் இன்றும் இளைஞர்களை ஈர்க்கும் புரட்சியாளராக இருக்கிறார்.
கழுகார் பதில்கள்!
ஜூனியர் விகடன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home