சே!-(புரட்சியின் அடையாளம் சே குவேரா.)
புரட்சியின் அடையாளம் சே குவேரா. வாழ்நாள் முழுக்க அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.
இடதுசாரிக் கொள்கைகள்கொண்ட குடும்பத்தில் பிறந்த சே, சிறு வயதில் இருந்தே அநீதி கண்டு ஆத்திரம்கொள்பவராக இருந்தார். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ஏழைகளின் நண்பராக வளர்ந்தார். இளம் வயதில் தென் அமெரிக்கா முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே-வின் வாழ்க்கையைத் திசை மாற்றியது. முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாகப் பிழிந்தெடுக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தார். இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார். ஃபிடல் காஸ்ட்ரோவுடனான அறிமுகம் இதைச் சாத்தியப்படுத்தியது. அர்ஜென்டினாவில் பிறந்த சே, கியூபாவின் விடுதலைக்காகப் போராடக் களம் இறங்கினார். அமெரிக்காவை அலற வைத்தார். கியூபா புரட்சி வெற்றி பெற்ற தும் கொஞ்ச காலம் காஸ்ட்ரோ அமைச்ச ரவையில் பங்கேற்றவர், மந்திரி பதவியைத் துறந்து காங்கோவின் விடுதலைக்குப் போராட ஆப்பிரிக்காவுக்குக் கிளம்பினார். அங்கிருந்து பொலிவியா மக்களை விடுதலை செய்ய அங்கு போனார். சே வை விடாமல் துரத்திய அமெரிக்காவின் சி.ஐ.ஏ. 50 கெரில்லா வீரர்களுடன் பொலிவியக் காட்டுக்குள் போராடிக் கொண்டு இருந்த சே வைச் சுட்டுக் கொன்றது. எந்த அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ, அதே அமெரிக்காவில் இப்போது அதிகம் விற்பனையாவது சே குவேராவின் உருவம் பதித்த டி-ஷர்ட்கள்தான். சே என்னும் புரட்சிக்காரனையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள்!
- கார்த்திகா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home