முதல் முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவர் எ.கே.அல்லாம அப்துல் ஹமீது பாகவி (ரஹ்).
முதல்
முதலில் திருக்குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்தவர் எ.கே.அல்லாம அப்துல் ஹமீது பாகவி
(ரஹ்).
தமிழ் மொழியில் முழுமையாக வெளிவந்த முதல் தமிழ் மொழிபெயர்ப்பு கி.பி. 1926 ஆம் ஆண்டில் அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் திருக்குர்ஆனுக்கு ‘தர்ஜுமா’ – மொழிபெயர்ப்பு செய்ய முயற்சி செய்து கி.பி.1949 இல் இரண்டு பாகங்களில் வெளியிட்ட தர்ஜுமத்துல் குர்ஆன் – பி அல்தபில் பயான்’ என்ற மொழிபெயர்ப்பு நூலாகும்.
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்ற (அரபி) திருவசனத்திற்கு “அளவற்ற அருளாளனும் – நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…” என்ற சொற்றொடைரைத் தூய தமிழில் அமைத்துத் தந்த பெருமை அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்களையே சாரும்.
மவுலானா ஆ.கா. அ. அவர்கள் திருக்குர்ஆனுக்குரிய தர்ஜுமாவை வழங்குவதற்காக செய்த பிரயாசைகளும், பிரயாணங்களும் பிரமிப்பு ஊட்டக்கூடியதாக உள்ளது.
இனிய தமிழில் எளிய நடையில் பிற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களும் பாமரர்களும் கூட படித்து விளங்கிக் கொள்ளும் வகையில் வடிவமைத்துத் தந்துள்ளார்கள்.
பல பக்கங்களில் எழுதி புரிய வைக்க வேண்டிய விவரங்களை மூல உரைக்கு ஊறு ஏற்படா வண்ணம் மொழிபெயர்த்து நாம் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான விளக்கங்களை திருவசனங்களிடையே இணைக்கப் பெற்றிருக்கும் பிறைவளைவு கோடுகளுக்குள் (brackets) வழங்கி இருக்கும் முறை புதுமையானதாகும்.
அல்லாஹ்வின் ரஹ்மத்து அன்னாரை அடையட்டும்!

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home