வாழ்வில் தேவைகளும் தேடல்களும் !!
வாழ்வில் தேவைகளும் தேடல்களும் !!
*********************************
மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் எதை எதையோ தேடி அலைகிறான் உயர்ந்த கல்வி, நல்ல வேலை , பணம் , ஆடம்பர வீடு ,சிறந்த வாழ்க்கைதுணை புகழ் இப்படி தேடல்கள் விரிந்து கொண்டே போகிறது இந்த பரந்த தேடலுக்குள் மறைந்திருக்கும் நோக்கம் மகிழ்ச்சி .மனதின் மன மகிழ்ச்சிக்கும் மன நிறைவுக்காகவும் தான் இத்தணை தேடல்கள் .
மகிழ்ச்சிகான மூலதனத்தை தேடி அலையும் மனிதன் தனது வாழ்க்கையில் மனதிற்கு தெரிந்தோ தெரியாமலோ நிறைய மகிழ்ச்சியை தொலைத்து விடுகிறான் .
தேடல்கள் தேவைகளை சார்ந்தும் ஆசையை சார்ந்தும் உருவாகிறது .தேவைக்கும் ஆசைக்கும் இடையில் சிறிய வித்தியாசம் தான் .ஆனால் இரண்டும் வாழ்க்கையில் வெவ்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. தேவையையும் ஆசையையும் மனதிற்கும் மூளைக்கும் உள்ள வித்தியாசம் என சொல்லலாம் .அடிப்படையில் இரண்டுமே ஒன்றுபோல் தோன்றினாலும், இரண்டுமே வேறு-வேறு என்பதை நம் உள்ளுனர்வை உன்னிப்பாக கவனித்தால் புரியும் .
உணவு என்பது தேவை அது ருசியனதாக இருக்க வேண்டும் என்பது ஆசை. பயணத்தை எளிதாக்க வாகனம் என்பது தேவை அது ஆடம்பர வாகனமாகஇருக்க வேண்டும் என்பது ஆசை, திருமணம் என்பது தேவை அது அழகான துணையோடு அமைய வேண்டும் என்பது ஆசை இப்படி சொல்லி கொண்டே போகலாம் .
மற்ற எல்லா உயிரினகளுக்கும் தேடல் என்பது தேவையை மட்டும் சார்ந்ததாக இருக்கிறது .ஆனால் மனிதர்களுக்கு தேடல் தேவையை சார்ந்தும் ஆசையை சார்ந்தும் இருக்கிறது .ஆசைக்கான தேடல் தான் மனிதனை வளர்ச்சியை நோக்கி நகர வைக்கிறது அதே சமயம் மனிதனை அழிவின் பாதைக்கு கொண்டு செல்வதும் ஆசைக்கான தேடல் தான் , உலக வரலாற்றில் நடந்த போர்கள் அதற்க்கு சாட்சி . ஆசைக்கான தேடல் மனிதனுடைய வாழ்வை பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு கொண்டு செல்கிறது ,ஆனால் தேடலின் அடிப்படை மன மகிழ்ச்சிக்காக என்பதை ஒருகட்டத்தில் மனிதன் மறந்து விடுகிறான் .
இதனால் தேடல்கள் ஒருகட்டத்தில் பொருளாதாரத்தை மையமாக வைத்தே நகர்கிறது . பெருளாதார முன்னேற்றம் எல்லா விதமான தேவைகளை பூர்த்தி செய்வதோடு ,இனிமையையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என அழமாக நம்பிவிடுகிறான். இந்த தவறை உணரும் போது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விடுகிறது .அல்லது வாழ்க்கை முடியும் தருவாயில் இருக்கிறது .
பொருளாதார ரீதியாக இந்த சமுகத்தில் பெரும் வெற்றி பெற்ற பலருக்கும் ஒரு ஏழ்மையான கடந்த காலம் இருந்திருக்கிறது .அதை அவர்கள் துன்பமான காலமாக குறிப்பிடுவதில்லை மாறாக புகழின் உச்சிக்கு சென்ற பிறகும் அந்த கால நினைவுக்குள் முழ்க விரும்புகிறார்கள் ,இதை பல சந்தர்ப்பத்தில் பல பிரபல மனிதர்கள் சொல்லியிருக்கிறார்கள் .பொருளாதார ரீதியாக வெற்றி பெற்ற போது கிடைக்காத சில இனிமைகள் எழ்மையாக கடந்து போன வழ்க்கையில் அவர்களுக்கு கிடைத்திருப்பதால் தான் அந்த நினைவுக்குள் முழ்க விரும்புகிறார்கள் .
பெரும்பாலான மனிதர்களுக்கு இனிமையான வாழ்கை பருவம் எது என்று கேட்டால் கண்டிப்பாக அவர்களது பள்ளி பருவமாக தான் இருக்கும். காரணம் அந்த பருவத்தில் அவர்களது தேடல் பொருளாதாரத்தை மையப்படுத்தி அமைந்திருப்பதிலை . குழந்தைதனத்தை ஒரு மனிதன் எப்போது முழுவாதுமாக இழந்து விடுகிறானோ அப்போது அவன் வாழ்வின் இனிமைகளையும் சுவாரசியத்தையும் இழந்து விடுகிறான் .
ஆசைக்கான தேடல் பொருளாதரத்தை மட்டும் மையபடுத்தி அமையும்போது மனிதன் தன் வாழ்வின் சுவாரசியங்களையும், உறவுகளையும் இழந்து விடுகிறான் . பெற்றோர்கள் இருவரும் பொருளாதர தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வதர்க்காக வேலைக்கு சென்று கொண்டு சிறுவதிலையே குழந்தைகளை விடுதியில் தங்கி படிக்கவைப்பதும் அவர்கள் பெரியவர்கள் ஆனவுடன் பெற்றோர்களை பார்பதற்க்கு நேரம் ஒதுக்க முடியாது என அவர்களை முதியோர் இல்லத்திர்க்கு அனுபிவிடுவது எல்லாம் வாழ்வின் தேடல் பொருளாதரத்தை மட்டும் மையப்படுத்தி அமையும்போது தான் .
தனிமனித ஒழுக்கத்தையும், நல்ல சமுதாய சிந்தனைகளையும், சக மனித நேசத்தையும் சொல்லி தந்த கல்வி இன்று பணம் சம்பாதிக்கும் முறையையும் , வியபார யுக்திகளையும் சொல்லி தருவதாக மாறியதற்கு காரணமும் ; சேவையாக செய்யப் பட்ட மருத்துவம் இன்று கந்துவட்டி தொழிலை விட மோசமான கோர முகத்தோடு இந்த சமுகத்தில் உலவுவதற்க்கு காரணமும் மனிதனுடைய தேடல் பொருளாதரத்தை மையமாக வைத்து குறுகி போனதால் தான் .
குழந்தைகளிடம் பெரிய பொறியல் வல்லுனர்களாக , மருத்துவர்களாக ,விஞ்ஞானிகளாக தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என சொல்லி வளர்ப்பதை விட நல்ல மனிதனாக வேண்டும் என சொல்லிக்கொடுங்கள் அது தான் அவர்களது வாழ்க்கை தேடலை அர்த்தமுள்ளதாக்கும் .
தகவலுக்கு நன்றி
நாஞ்சில் கமல் .

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home