22 October 2013

இந்த சகோதரிக்கு உங்களின் பதில் என்ன ?



அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு... நான் தான் ஜமீலா... பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுமி, நான் வசிப்பது காசா நகரில்.

ஆகஸ்ட் 2009 ஆம் ஆண்டு நான் எனது வீட்டில், எனது தங்கை ஷாசா உடன் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தேன்...

திடீரென பயங்கர சப்தம், எங்களுக்கு இது போன்ற சப்தங்கள் அன்றாடம் நடக்கும் விசயம்தான், ஆனாலும்.... இந்த சத்தம் எனது காதுக்கு மிக மிக அருகில்... ஆம், இது இஸ்ரேலியர்கள் எங்களுக்கு அனுப்பும் பூங்கொத்துக்கள்,

குண்டுகள், குண்டுகள் மேலும் குண்டுகள்.... எங்கும் புகை மூட்டம், என்னால் ஒன்றும் பார்க்க இயலவில்லை.

தேடுகிறேன் ஒவ்வொருவரையும்... ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை, சுய நினைவு இழந்துவிட்டேன்.... கண்விழித்தேன் பல மணி நேரம் கழித்து... என்னவென்று சொல்வேன் (எனது கால்கள் இரண்டும் துண்டிக்கப் பட்டிருந்தது... நான் இனிமேல் எப்படி நடப்பேன் உங்கள் குழந்தைகள் போல் ?

அங்கிள்... உங்களைத்தான்... உங்களுக்கும் என்னைப் போன்று குழந்தைகள் உங்கள் வீட்டில் உள்ளதா ? கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்

என்னை உங்கள் குழந்த போல், இரண்டு காலும் இல்லாத நொண்டி நான் இப்போது..

எங்கும் நகர முடியாது, மற்ற குழந்தைகள் போல்... எனது தங்கை ஷாசா எங்கே என்று கேட்டேன்... அவர்களது பதிலோ, அவள் கொல்லப்பட்டாள் என்று... நான் நொறுங்கிப்போனேன்... இதுதான் எனது, என் போன்ற பலரின் வாழ்க்கையும் இங்கு...

உலக முழுவதும் பறந்து விரிந்துள்ள என் முஸ்லிம் சகோதரர்களே...

என்னையும், என்னை போன்றோரையும் காப்பது உங்களது கடமை இல்லையா ? எங்களை காப்பாற்ற மாட்டீர்களா
?

----------------------

என் சகோதரியே...

உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் என் கண்ணில் இரத்தமாய் சொட்டுகிறது. உன்னை காக்க முதுகெலும்பு இல்லாத முடமாய் நிற்கிறேன்.

உன்னுடைய அழுகையில் நாங்கள் சிரித்து விடுவோம் என்று எண்ணிவிட்டாயா ?

என் இறைவன் அதற்கு உரிய ஆற்றலை கொடுத்தால் உன்னை காப்பதை விட வேறு சந்தோசம் எங்களுக்கு இல்லை சகோதரி...

இன்று என்னால் உனக்காக செய்ய முடிந்தது இரு கைகளையும் ஏந்துவதை தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லையே என் சகோதரி...

கவலை கொள்ளாதே நிச்சயம் ஓர் நாள் விடியும், அன்று உமது தேசம் திரும்பும் திசை எல்லாம் விடுதலை முழக்கம் கொட்டும் இன்ஷா அல்லாஹ்...

சங்கை ரிதுவான்&உலகமுஸ்லிம் மக்கள்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home