25 October 2013

மேற்குலகில் பெண்களின் பரிதாப நிலை!---பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது…



மேற்குலகில் பெண்களின் பரிதாப நிலை!

மேற்குலகு எவ்வாறு பெண்களை ஒரு போகப்பொருளாகவும் காட்சிப்பொருளாகவும் கருதி அவளது கண்ணியத்தை பறிக்கிறது என்பது பற்றிய அடிப்படையை நாம் பெண்ணியம் கதைக்கும் பெண்விடுதலை அமைப்புகளுக்கு எடுத்துக் கூற ஒவ்வொரு முஸ்லிமும் கடமைப்பட்டுள்ளான்.

மேலும் இஸ்லாம் எவ்வாறு பெண்களை பொக்கிசமாக கருதி அவர்களை கண்ணியப்படுத்துகிறது என்ற உண்மைகளை விளக்கி இஸ்லாத்தின் மகிமையை உணர்த்தி இஸ்லாத்தின் மீதான நம்பிக்கையை வலுவூட்ட ஒவ்வொரு முஸ்லிமும் கடமைப்பட்டுள்ளான்.









பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது

இவ்வுண்மையை உணர்வோம்! இஸ்லாமிய வாழ்வின் முன்மாதிரியை உலகிற்கு எடுத்தியம்புவோம்! பெண்ணியம் பற்றிய கோட்பாட்டின் பலவீனத்தை உலகிற்கு உணர்த்துவோம்!

பெண்களை இஸ்லாம் மிகவும் பொக்கிசமாக கருதுகிறது. அவர்களை மிகவும் உயர்ந்த இடத்தில் வைத்து பர்க்கிறது. நபி(ஸல்) கூறினார்கள். உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியிடம் சிறந்தவராவார். நான் எனது மனைவி மார்களிடம் சிறந்தவனாக இருக்கிறேன்.

இஸ்லாத்தில் பெண்களுக்கு சகலவிதமான உரிமைகளையும் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வழங்கிவிட்டது. பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு படைப்பாளனால் வழங்கப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி அவர்களது வாழ்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க, ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் உருவாக வித்திட் டு வாழ்வின் சகல துறைகளுக்குமான வழிகாட்டலைக் கொண்ட மார்க்கமே இஸ்லாமாகும்.

அதே நேரம் பெண்ணியம் கதைக்கும் மேற்கு பெண்களை வெறும் போகப்பொருளாக நடத்துவதுடன் இயற்கைத் தன்மைக்கு முறணான ஒரு செய்தியை (ஆணும் பெண்ணும் சமம்) கூறி பெண்களை உசுப்பேற்றி அவர்களது நிம்மதியை பறித்து அவர்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி இருப்பதனைக் காணலாம்.
மேற்கத்தைய இந்த தாராண்மைவாதக் கோட்பாடு மற்றும் எல்லையற்ற தனிமனித சுதந்திரத்தினடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட வாழ்கை முறையினால் சமூகத்தில் தனிமனிதன் சீரழிந்து கிடப்பது மாத்திரமன்றி குடும்பவாழ்வும் சீர் குலைந்து கணவன் மனைவி உறவு மற்றும் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையிலான பிணைப்பு பலவீனமுற்றுக் காணப்படுகிறது. இது குடும்பவாழ்வில் நிம்மதியில்லாத நிலையை தோற்றுவிப்பதுடன் பல்வேறுவகையான துஸ்பிரயோகங்கள் மற்றும் ஒழுக்கச் சீர்கேடுகள் மலிந்துவிடக் காரணமாகிறது.

இத்தகைய மேற்கினது மொடலாக இன்று பெண்ணியம் கீழைத்தேய நாடுகளிலும் பேசப்பபடுகிறது.

மதத்தினது தலையீட்டை பொதுவாழ்வில் ஒதுக்கி மனித சிந்தனையடிப்படையில் கட்டியெழுப்பப் படும் மேற்குலகம் ஆத்மீக வறுமையால் சீரழிந்து காணப்படும் இந்நிலையில் இஸ்லாம் அழகிய வாழ்கை முன்மாதிகளை சுமார் 1300 ஆண்டுகாலம் உலகிற்கு வழங்கியுள்ளதுடன் அதுவே மனிதனின் இயற்கைத் தன்மைக்கு ஏற்றதாகவும் மனிதனை திருப்திப்படுத்துவதாகவும் அமையும். இவ்வுண்மையை உணர்வோம்! இஸ்லாமிய வாழ்வின் முன்மாதிரியை எடுத்தியம்புவோம்!

 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home