சொந்த ஊருக்கு போறீங்களா? 98407 00100,க்கு எஸ்.எம்.எஸ் செய்தால் இரவும் பகலும் பைக்கில் கண்காணிப்பு
சென்னை : நவம்பர் 2ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து சென்னை வந்து
பணியாற்றுவோர் சொந்த ஊர் செல்ல ரயில் மற்றும் பஸ்களில் முன் பதிவு
செய்துள்ளனர். பெரும்பாலானோர் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் என்ற
நிலையில் பண்டிகைக்கு குடும்பத்தோடு சொந்த ஊர் செல்வது வழக்கம். ஏற்கனவே
பட்டப்பகலிலேயே பூட்டியிருக்கும் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம்
சென்னையில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பண்டிகைக்காக ஒட்டுமொத்தமாக பலர் வீட்டை பூட்டிச்சென்றால் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாகி விடும் என்ற நிலையில் மாநகர காவல்துறை புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
* வீட்டை பூட்டிக்கொண்டு சொந்த ஊர் செல்வோர் தங்கள் எல்லைக்குட்பட்ட, அருகில் உள்ள காவல் நிலையங்களில் தாங்கள் வெளியூர் செல்லும் தகவலை பதிவு செய்ய வேண்டும்.
* இதற்காக மாநகர காவல்துறையில் இயங்கும் 132 காவல் நிலையங்களிலும் பூட்டியிருக்கும் வீடுகள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அந்த பதிவேட்டில் சம்பந்தப்பட்ட நபர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு அந்த பகுதி போலீசார் அந்த வீட்டை கண்காணிப்பர்.
* வீட்டை பூட்டிச்செல்லும்போது தங்களது பயண விவரங்களை யும் அதாவது புறப்படும் நாள், திரும்ப வரும்நாள் போன்ற விவரங்களையும், வீட்டில் மதிப்புமிக்க பொருட்கள் உள்ளதா என்ற விவரத்தையும் பதிவு செய்ய வேண்டும்.
* நேரில் வந்து தகவல் தெரிவிக்க இயலாதவர்கள் 9840700100 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பலாம். இதற்காக எஸ்.எம்.எஸ் பதிவேடு ஒன்று பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ் தகவல்கள் அதில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வீடு கண்காணிப்பில் கொண்டு வரப்படும்.
* இந்த எஸ்.எம்.எஸ் தகவல்களை பராமரிக்கவும் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட எல்லை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கவும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
* இந்த முறை 2009 ல் ஏற்படுத்தப்பட்டபோதும் அப்போது போதிய வரவேற்பு இல்லை. மேலும் வீடு பூட்டியிருக்கிறது என்பதற்காக பராமரிக்கப்படும் பதிவேட்டில் பதிவு செய்து செய்ய மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து இந்த எஸ்.எம்.எஸ் முறையானது நவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிமிடமும் பெறப்படும் எஸ்.எம்.எஸ் தகவல்கள் அந்தந்த காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு மஞ்சள் பைக்கில் வரும் போலீசார் பகலிலும், நீல நிற பைக்கில் வரும் போலீசார் இரவில் கண்காணிப்பை மேற்கொள்வார்கள்.
* சம்பந்தப்பட்ட வீடுகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், வீட்டுக்கு வந்து செல்லும் பால்காரர், பேப்பர்காரர், காய்கறிக்காரர் இதர நபர்கள் கண்காணிக்கப்படுவர்.
* போலீசாரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
* வீடு பூட்டியிருக்கிறது என்ற தகவலை 9840700100 என்ற எண்ணுக்கு கீழ்கண்ட முறையில் தகவல் அனுப்ப வேண்டும்.
LOCKEDHOUSE DOOR NO LOCALITY FROM DATE, MONTH TO DATE, MONTH என்ற தகவல்களை முழுமையாக பதிவு செய்து மேலே கண்ட எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்
வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் பாதுகாப்பு கேட்டால் அவர்களின் பெயர், முகவரியை 044,23452320 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று முந்தைய சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி தெரிவித்திருந்தார். அந்த திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home