26 October 2013

முஸ்லிம்களுக்காக விசேட ஸிம் கார்ட் ஒன்றை கிரேக்க பொறியியளாலர் வடிவமைத்துள்ளார்


கிரேக்கத்தைச் சேர்ந்த யனீஸ் ஹட்ஸோபுலுஸ் என்ற பொறியியலாளர் முஸ்லிம்களுக்கென தனித்துவமான தொலைபேசி ஸிம் கார்ட் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஸிம் அட்டையில் கஹ்பா திசைகாட்டி,தொழுகை நேரங்கள், அதான் மற்றும் இஸ்லாமிய மாதங்கள் போன்ற அப்ளிகேசன்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த ஸிம் அட்டையை ஸ்மார்ட் போன்களிலும்,சாதாரண கையடக்க தொலைபேசிகளிலும் பயன்படுத்தமுடியும். இதனையொத்த ஸிம் அட்டைகள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், ஸ்மார்ட் போன் மற்றும் சாதாரண கைத்தொலைபேசிகள் இரண்டிலும் பாவிக்கக்கூடியதாக இருப்பது இநத ஸிம் அட்டையின் சிறப்பம்சமாகும்.ஹட்ஸோபுலுஸ் ஸிம் அட்டையானது எதிர்வரும் நவம்பர் மாதம் தென்ஆபிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெறவுள்ள அப்ரிகாகொம் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home