28 October 2013

கடின முயற்சியின் பின் கின்னஸ் சாதனையாளருக்கு விரைவில் திருமணம்



2.51 மீட்டர் (8 1/4 அடி) உயரத்துடன் உலகின் மிக உயரமான மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளவர் சுல்தான் கோசென்.
துருக்கி நாட்டில் வாழும் விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ´பருவத்தே பயிர் செய்ய´ விரும்பி தகுந்த பெண்ணை தேடி வந்தார்.
ஆனால், இவரது உயரத்தை கண்டு மிரண்ட பல பெண்கள் இவரை திருமணம் செய்ய மறுத்து விட்டனர். தேடித்தேடி அலுத்துப்போய், இனி காலம் முழுவதும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து விடலாம் என முடிவெடுத்த சுல்தான் கோசென், தற்போது தனது 30வது வயதில் மெர்வோ டிபோ என்ற பெண்ணை சந்தித்துள்ளார்.
முதல் சந்திப்பிலேயே, ´காதல் பற்றிக் கொள்ள´ சுல்தான் கோசென் அவசர கதியில் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
தன்னை விட 2 1/2 அடி (30 அங்குலம்) உயரம் குறைவான காதலியை மணம் முடிக்கும் விழாவுக்கு ஏராளமான வி.ஐ.பி.க்களையும் இவர் அழைத்துள்ளார்.
திருமண உடைகள் உள்ளிட்ட எல்லா வேலையையும் முடித்து விட்ட சுல்தான் கோசென் மனைவியை அழைத்துக் கொண்டு ஊர்வலம் போக உயரமான காரை தேடிக் கொண்டிருக்கிறார்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home