27 November 2013

ரூ.120 கோடி மதிப்பிலான தீவை காதலனுக்கு பரிசளிக்கும் நடிகை ஏஞ்சலீனா ஜோலி



ரூ.120 கோடி மதிப்பிலான தீவை காதலனுக்கு பரிசளிக்கும் நடிகை ஏஞ்சலீனா ஜோலி
காதலனுக்கு நடிகை ஏஞ்சலினா ஜோலி ரூ.120 கோடி மதிப்புள்ள தீவு ஒன்றை பரிசளிக்கிறார்.

பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி (38). ஆஸ்கார் விருது பெற்றவர். இவரது காதலன் ஆலிவுட் நடிகர் பிராட் பிட். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர். 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர்.

இந்த நிலையில், நடிகர் பிராட் பிட் தனது 50–வது பிறந்த நாளை வருகிற டிசம்பர் 18–ந்தேதி கொண்டாட உள்ளார். அதைத்தொடர்ந்து அவருக்கு தனது காதல் பரிசாக ஏஞ்சலினா ஜோலி இருதய வடிவிலான ஒரு சிறிய தீவை பரிசளிக்க உள்ளார்.

அது அமெரிக்காவின் பெட்ரா போஸ்ட்ஸ் பகுதியில் உள்ளது. இங்கு பிராட் பிட்டுக்கு மிகவும் பிடித்தமான கட்டிட கலை நிபுணர் பிராங்க் லியோட் ரைட் வடிவமைத்த 2 பிரமாண்ட பங்களாக்களையும் கட்டியுள்ளார்.

இவற்றின் மதிப்பு ரூ.120 கோடியாகும். பெட்ரா போஸ்ட்ஸ் பகுதிக்கு மேன்ஹட்டன் நகரில் இருந்து 15 நிமிடத்தில் செல்ல முடியும். இப்பகுதி இயற்கை எழில் நிறைந்தது.
-அஷ்ரப்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home