11 November 2013

ஆண்டுக்கு ஒரு லட்சம் விபத்து 30 ஆயிரம் பலியில் தமிழகத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழப்பு



இந்தியாவில் ஓராண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் சாலை விபத்துக்கள் நடப்பதாகவும், இந்த விபத்துக்களுக்கு அதிகபட்சம் பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் முழுக்காரணமாக இருக்கிறது என்றும் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த 2012 ஆண்டில் நாடு முழுவதும் ஒரு சர்வே எடுத்தது. இதன்படி அறியப்பட்ட விவரம் : ஓவர்லோடு வாகனங்களே இந்த விபத்துக்கு அதிக காரணமாக இருந்து வருகிறது. இதில் மொத்தம் இந்தியா முழுவதும், 99 ஆயிரத்து 854 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் மொத்தம் 30 ஆயிரத்து 522 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் காயமுற்றுள்ளனர்.
இந்த விபத்துக்கள் தமிழகத்தில் 20 ஆயிரத்து 226 , மத்திய பிரதேசத்தில் 12 ஆயிரத்து 346, ஆந்திரபிரதேசத்தில் 12 ஆயிரத்து 16 , கர்நாடகாவில் 10 ஆயிரத்து 555, மகாராஷ்ட்டிராவில் 8 ஆயிரத்து 617 விபத்துக்கள் நடந்துள்ளன.
இந்த விபத்துக்களில் பலியோனார் , தமிழகத்தில் 4 ஆயிரத்து 99 பேர், ம.பிரேதசம் 2 ஆயிரம் பேர், ஆந்திரா 4 ஆயிரத்து 486 பேர், கர்நாடகா, 2 ஆயிரத்து 341 பேர் , மகாராஷ்ட்டிரா 2 ஆயிரத்து 946 பேர் இறந்துள்ளனர். இந்த விபத்து இறப்பில் ஆந்திரா முந்தி நிற்கிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மாநில போக்குவரத்து துறை பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசுகையில் அதிக பாரம் ஏற்றும் வாகனங்கள் விபத்துக்களை ஏற்படுத்துவது என்பது மட்டுமல்ல. சாலைகளும் பெரும் சேதத்திற்குள்ளாகிறது என்றும் கவலை தெரிவித்தார்.
சரக்கு வாகன டயர்கள் : அதிக பாரம் ஏற்றும் வாகனங்களுக்கான டயர் உற்பத்தியாளர்கள் இன்னும் தங்களின் டெக்னாலஜி துறையில் முன்னேற்றமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதன் மூலம் ஓரளவு விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த கோரிக்கையை ஆல் இந்தியா சரக்கு வாகன ஓனர் சங்கத்தினர் முன்வைத்து டயர் உற்பத்தியாளர்களுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றும் அனுப்பி வைத்துள்ளனர்.

-அஷ்ரப

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home