10 November 2013

முஸ்லிம்களெல்லாம் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள ஏன் பெருமிதம் கொள்கிறோம் தெரியுமா ?



முஸ்லிம்களெல்லாம் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள ஏன் பெருமிதம் கொள்கிறோம் தெரியுமா ? இஸ்லாம் மார்க்கம் அப்படிப்பட்டது. உன்னத நடை முறைகளை .. நாகரீகங்களைக் கொண்டது. மனித நேயமிக்கது.அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவத்தை " மறைஞானப் பேழை" இதழில் படித்தேன்..மனம் சிலிர்த்தேன் . நீங்களும் பாருங்கள். ************** ஒருநாள் அலீ ( ரலி ) அவர்கள் பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் ஒரு வயதான யூதர் சென்று கொண்டிருந்தார். யூதரின் பின்னால் தான் செல்வதா என எண்ணி ... வேகமாக நடந்து அவரை முந்திச் சென்று பள்ளிவாசலை அடைந்தார்கள். அங்கே அலீயைக் கண்ட அண்ணல நபி ( ஸல் ) அவர்கள் , " அலீயே ! உங்கள் முகத்தில் இப்போது பிரகாசத்தைக் காணவில்லையே ..ஏன் ?" என்று கேட்டார்கள். அதற்கு, நடந்த சம்பவத்தை அண்ணலிடம் விளக்கினார் அலீ . அதைக் கேட்ட நபியவர்கள், " உடனே திரும்பிச் சென்று அந்த வயோதிக யூதரிடம் மன்னிப்புக் கேளுங்கள் " என்று அலீயை அனுப்பி வைத்தார்கள் . ஹஸ்ரத் அலீ ( ரலி ) அவர்களும் ஓடோடிச் சென்று அந்த யூத முதியவரிடம் அவரை முந்திச் சென்றதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள். இந்த பண்பாடுள்ள முஸ்லிம்களை யாரும் மோசமாக எண்ணாதீர்கள் சகோதரர்களே...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home